ஸ்ரீ ராம நாம மகிமை
ஸ்ரீ ராம நாம மகிமை
புன்னகை பூக்கும் புவன சுந்தரா
புவியைக் காக்க வந்த நாராயணா
அகிலம் போற்றும் நாமம் கொண்டவா
அடியவர் துயர் தீர்க்கும் பக்தவத்சலா
அன்பு சிவனும் அம்மைக்கு அருளிய
அருமை மந்திரம் ராம நாம வடிவெடுத்தவா
அன்போடு அழைக்கும் அடியவரை
தேடித் சென்று அருளிய எளியவா
அல்லும் பகலும் உந்தன் நாமமே
பவ கடலை கடக்க உதவும் தோணியாகுமே
நாவை தந்தாய் உன் நாமம் சொல்ல
மனதை தந்தாய் உன் நினைவைக் கொள்ள
கண்களை அளித்தாய் உன் திருவடிவு
கண்டு ஆனந்தம் கொள்ள
தியாகராஜர் உன் புகழ் பாடி மகிழ்ந்து
பக்தி செய்தார் -பத்ராச்சல ராமதாசரும்
பாமாலை சூட்டி மகிழ்ந்தாரே
சொல்வதற்கும் நினைப்பதற்கும்
எளிய நாமம் ராம நாமம்
எந்நேரமும் சொல்லி வந்தாலே
இவ்வுலக வாழ்வு என்றும்
இன்ப சோலையாகும் தன்னாலே
ராம பக்தி என்றும் சக்தியும் தரும்
வாழ்வின் முடிவில் முக்தியும் தரும்.
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீராம ஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.
ReplyDeleteநம்பிய பேருக்கு ஏது பயம் ?
Deleteராம் ராம்...
ReplyDeleteகோமா நிலைக்கு செல்லும் முன்னரே
ReplyDeleteராம நாமத்தை சொல்லி பழகு.