அமைதியில்லா உலகம்.
அமைதியில்லா உலகம்.
இன்று உலகின் பல பகுதிகளில் தேவையற்ற போர்கள் மூண்டு
கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் தங்கள் நாட்டை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
போரில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டு விட்டனர்.
கணக்கிலடங்கா மக்கள் வெள்ளம் பல நாடுகளில் தஞ்சம் அடைந்து சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
அவர்கள் நாட்டில் நடைபெறும் போர்களுக்கு அந்த நாட்டு மக்கள் எள்ளளவும் காரணமில்லாத நிலையில் நாட்டை ஆள்பவர்களுக்கும் அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் நடக்கும் ஆணவ சண்டைகளில் அப்பாவி மக்கள் துன்பப்படுகின்றனர்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் ஆயுத வல்லரசுகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்நாட்டு வளங்களை கொள்ளையடிக்கின்றனர்.
உலகில் எங்கும் அமைதியில்லை .
இந்த மனிதசமூகம் மதம், ஜாதி, இனம், மொழி இவற்றால் பிரிவுபட்டு பிளவுபட்டு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் அறிவில்லா விலங்குகள் போல் வீணே சண்டையிட்டு வீட்டிலேவிட்டில் பூச்சிகள்போல் சாகின்றனர்.
உலகம் தோன்றிய நாள் முதல் இப்படித்தான் இருக்கிறது.
எண்ணங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
கர்வம் மற்றும் பொறாமை பிடித்தவர்களின் செயல்பாடுகள்
அன்றும் இன்றும் என்றும் ஒன்றுதான்.

No comments:
Post a Comment