Thursday, September 6, 2018

இவ்வுலக வாழ்வு இனிதே!

இவ்வுலக வாழ்வு இனிதே!

இவ்வுலக வாழ்வு இனிதே!

அன்பால் அவள்
அருளை பெறலாம்

உயர் பண்பால்
உயர் நிலை எய்தலாம்

சக  உயிர்களிடம் நாம் கருணையோடு
நடந்துகொண்டால் அவள் கருணை
தானே நம்மை நாடி அவரும்

தன்னை நாடி வருபவர்களின்
துன்பம்போக்குபவள்

வாழ்வில் வாடி நிற்பவர்களின்
வாட்டம் போக்குபவள்


சொல்லும் செயலும் ஒன்றானால்
செல்வம் தானே தேடி வரும்

நில்லாது ஓடும்  செல்வத்தை
நிற்கதியாய் கிடப்பவர்க்கு
அளித்தால்போதும் நிலையான
இன்பம் நிலைத்து நிற்கும்
உள்ளத்தில் எப்போதும்

பொல்லாங்கு சொல்வதும்
பொறாமைப் படுவதும்
அணையாது கிடந்து ஒருநாள்
அழிவைத் தரும் ஆபத்து
என்பது உணர்வதே அறிவு

அன்பு என்பது உயிர்களின் இயல்பு
அதை தோற்றுவிடாமல் செய்வது
நான் நீ என்ற பேத உணர்வு

வேதங்கள் பல  கற்றாலும்
பேதங்கள் ஒழியாவிடில்
தனக்கும் சுகம் இல்லை
தன்னை சுற்றியுள்ளோருக்கும்
சுகம் இல்லை

தன் உள்ளத்தில்
அமைதியை காணாதவர்களுக்கு
இவ்வுலகமே அமைதியில்லா
காடாக தோற்றமளிக்கும்.


இறைவனோ அல்லது இறைவியோ
எல்லாம் நம் மனம் வைத்த பெயர்களே

பெயர்களின் பின்னால்
ஒளிந்துகொண்டிருப்பது
ஒளி மட்டுமே .

அதுவேதான் ஒலியாகவும்
வெவ்வேறு  பொருட்களாகவும்
தோன்றும்

இந்த உண்மையை உணர்ந்து
அடங்கி நின்றால் போதும்
இவ்வுலக  வாழ்வு இனிதே கழியும். 

2 comments:

  1. உலகம் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி கிடக்கிறது. உண்மையின் பின்னால் எவரும் செல்ல விரும்புவதில்லை.

    ReplyDelete