பொம்பெயி, கெர்குலானெயும், தொரே அன்னுசியாத்தாஎன்பவற்றின் தொல்பொருளியற் பகுதி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
பொம்பெயி நகரின் ஒரு அமைதியான தெரு
| |
வகை | Cultural |
ஒப்பளவு | iii, iv, v |
உசாத்துணை | 829 |
UNESCO region | ஐரோப்பிய உலக பாரம்பரியக் களங்கள் |
ஆள்கூற்று | 40.751000°N 14.487000°Eஆள்கூற்று: 40.751000°N 14.487000°E |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1997 (21st தொடர்) |
எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்?
தெரிந்துகொள்ளுங்கள் .இந்த பதிவைப் பார்த்து.
பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நேப்பிள்சு என்பதில் அமைந்துள்ளதும் பகுதியளவிற் புதையுண்டு போயுள்ளதுமான பண்டைய உரோம நகராகும். கிபி 79 ஆம் ஆண்டில் தொடரச்சியாக இரு நாட்கள் ஏற்பட்ட வெசுவியுசு எரிமலையின் காரணமாக அருகிலுள்ள கெர்குலானெயும் நகருடன் சேர்த்து பொம்பெயி நகரம் முழுமையாக அழிந்து புதையுண்டு போனது. அந்த எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியான எரிமலைச் சாம்பல் மற்றும் இறுகிய தீக்குழம்புகளினுள் அகப்பட்டு பொம்பெயி நகரம் 4 முதல் 6 மீற்றர் வரை புதையுண்டு போனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 18 ஆம் நூற்றாடளவிலான காலப்பகுதி வரையில் அதாவது 1749 ஆம் ஆண்டு தற்செயலாகக் கண்டறியப்படும் வரையில் இந்நகரம் தொலைந்து போயிருந்தது. அதன் பின்னர் நடந்த ஆய்வுகள் உரோமப் பேரரசு மிக உயர்வான நிலையிலிருந்த காலப்பகுதியில் மக்களின் வாழ்க்கை, பண்பாடுகள் எவ்வாறிருந்தன என்பது தொடர்பில் மிகக் கூடிய தகவல்களை அளித்துள்ளன. யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களமான இது இப்போது ஆண்டு தோறும் கிட்டத்தட்ட இரண்டரை மில்லியன் உல்லாசப் பயணிகளைக் கவரும் ஒரு இத்தாலிய சுற்றுலாத் தலமாகக் காணப்படுகிறது
No comments:
Post a Comment