Saturday, December 3, 2011

பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால் பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்

ஒரு கவிஞன் எழுதினான்
தந்தை தவறு செய்தான்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம்
பந்தம் வளர்த்துவிட்டோம் என்று
பத்து மாத பந்தம் தாயுடன்
பிறக்கும்போதே பூர்வ ஜன்ம பந்தம்
பிறந்தவுடன் ஏற்ப்படும் பந்தங்கள் கணக்கற்றவை
உடலோடு தோன்றும் பந்தங்கள் மரணத்தோடு முடிவடைந்துவிடும்
ஆனால் மனதோடு தோன்றும் பந்தங்கள் என்றும் அழிவதில்லை
அவைகள் பிறவிதோறும் நம்மை தொடர்கின்றன
இதிலிருந்து எப்படி விடுபடுவது ?
உயிருடன் இருக்கும்போதே பந்தங்களை
உரிய முறையில் நீக்கிகொள்ள வேண்டும்
நம் கடமைகளை சரியாக செய்துவிட்டால்
ஒவ்வொரு பந்தமாக நம்மை விட்டு நீங்கிவிடும்
உதாரணத்திற்கு ஒரு தாய் தன் குழந்தையை
நன்றாக,ஒழுக்கமுள்ளவனாக வளர்க்க வேண்டும்
அதுபோல் ஒவ்வொருவரும் அவரவர்களின்
கடமைகளை சரியாக செய்து முடிக்க வேண்டும்
தவறினால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள்
மிகவும் மோசமாக இருக்கும் என்பதை
இன்றைய சமுதாயத்தில் பெருகிவிட்ட
ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களுமே இதற்க்கு சான்று
என்பதை அனைவரும் அறிந்ததே
அவ்வாறு செய்யாமல் பந்தங்களிலிருந்து
நம்மை விடுவித்துக்கொள்ள முடியாது
பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால்
பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்
நம்மிடமிருந்து பிரிக்கமுடியாத பந்தம் ஒன்று உண்டென்றால்
அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு
மற்ற பந்தங்கள் அனைத்தும் தற்காலிகமே
நாம் இறைவனை நினைத்துகொண்டே இருந்தால்
மற்ற பந்தங்களெல்லாம் தானே விலகிவிடும்.
இல்லாவிடில் இறைவன் நீக்கிடுவான்

அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் அதிகரிக்கும்

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தம்மையும்
இந்த உலகையும் படைத்த ஒருவனை
இறைவன்என்று நம்புகிறார்கள்
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தங்களை
கூறிகொள்ளும் நாத்திகர்கள் கூட தங்களுக்கு
புரியாமல் இருக்கும் விஷயங்களை இயற்க்கை என்று
பெயர் சூட்டி மக்களை குழப்புகின்றனர்
அறிவுடையவன் அவனை பற்றி
அறிந்து கொள்ள பல சாத்திரங்களை
படித்து பல வழிகளில் இறைவனை புரிந்து
கொள்ள கடும் முயற்சிமேற்கொள்ளுகிறான்
அவனுக்கு குழப்பம்தான் முடிவில் மிஞ்சுகிறது
ஏனென்றால் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வழியை கூறுகின்றன
ஒரு சாத்திரம் கூறும் வழியை மற்றொரு
சாத்திர ஆசிரியர் ஏற்றுகொள்ளமறுப்பதுடன்
கண்டிக்கவும் செய்கின்றார்
அதனால் ஒவ்வொரு முறையையும்
பரிசீலித்து பார்ப்பதிலேயே அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது
பலபுராணங்களை இயற்றிய வியாச பகவானே
மன அமைதியின்றி பகவான் கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் பக்தி இலக்கியத்தை இயற்றி
மன அமைதி அடைந்தார்.என்பது உண்மை
சாத்திரங்களை வாழ்நாள் முழுவதும் படித்துகொண்டிருப்பதில்
யாதொரு பயனும் இல்லை
அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும்
படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும்
அதிகரிக்கும் அதனால் ஆன்மீகத்தில்
எந்த முன்னேற்றமும் ஏற்ப்படாது
ஏதாவதொரு வழியை பின்பற்றி நம்பிக்கையுடன்
மன உறுதியுடன் இறைவனை அடைவதற்கு
முயற்சி செய்பவனே வெற்றி காண்கிறான்
பாமரர்கள் அவன் மீது கள்ளமற்ற உள்ளத்துடன் பக்தி செய்து
மிக சுலபமாக அவன் அருளை பெற்றுவிடுகின்றனர்
என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?
ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்து மரிக்கிறோம்
இந்த இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை குழப்பங்கள்
இறைவன் நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியதனைதையும்
நாம் இன்பமாக வாழ அளித்துள்ளான்
ஆனால் நம் ஏன் அவன் தந்தஇன்பங்களை அனுபவிக்காமல்
துன்ப கடலில் மூழ்கி கிடக்கிறோம் ?
எல்லாம் இருந்தும் அதை முழு திருப்தியுடன்
அனுபவிக்காமல் இல்லாததை நினைத்து
ஏங்குகிறோம்?
நம்மால் ஒரு அளவிற்குமேல் எதையும்
அனுபவிக்கமுடியாது என்று தெரிந்தும்
பிறரின் சொத்துக்களை அபகரித்து ஏன்
மற்றவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கிறோம்?
எல்லாவற்றிற்கும் காரணம் நம்முடைய சுயநலம்தான்
அந்த தீய அக்குணம் நம்மை விட்டு போகும்வரை
நாமும் நிம்மதியாக இருக்கமுடியாது
மற்றவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது
இறைவா நீதான் உன் படைப்புகளுக்கு
நல்ல குணத்தை அருள வேண்டும்

Friday, December 2, 2011

உன் வேதனைக்கு பிறரை நிந்தனை செய்வதை நிறுத்து

இறைவா உன்னை நினைக்க முடியாமல்
துன்பங்களை அடுத்தடுத்து தருகிறாயே
துன்பங்களை மறக்க முடியவில்லை
துன்பங்களை பொறுத்துகொள்ளும் உடல் உறுதியோ
மன உறுதியோ இல்லை
ஒரு துன்பம் நீங்கினால் அடுத்த துன்பம்
வாசலில் தயாராக நிற்கிறது
உடலில் நோய் என்ற நிலை மாறி
உடலே நோயாக மாறிவிட்டதே
எல்லாம் இந்த உடல் மீது வைத்த
பற்றினால் விளைந்தது
இந்த உடலுக்குள் உள்ளத்திற்குள்
உறைந்து என்னை இயக்கும் உன் மீது
பற்று வைக்காமல் வந்த வினைதான் இது
மனமே இனியாவது உன் கவனத்தை
இறைவன் மீது செலுத்து
உன் துன்பங்கள் குறையும்
அவன் நாமத்தை உச்சரி
அந்த நாமத்தின் நாதத்தின் மீது
சிந்தனையை செலுத்து
உன் வேதனைக்கு பிறரை நிந்தனை
செய்வதை நிறுத்து
வேதனைகள் குறையும்
வாதனைகள் நீங்கும்
பயிரை காக்கும் மழை போல்
உயிருக்குயிரான இறைவன்
உண்மையான பக்தனை காப்பான். .

இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்

இறைவன் தன்னை அறிய முயற்சிப்பவர்களுக்கு
உதவ தயாராக காத்துகொண்டிருக்கிறான்
ஆனால் யாரும் அவனை கேட்பதுமில்லை,விரும்புவதுமில்லை
அவனிடம் செல்பவர்கள் எல்லாம் தங்கள் கோரிக்கைகளை
நிறைவேற்றித்தருமாறு மட்டுமே கேட்கின்றனர்
அதற்காக எத்தனை துன்பங்களை வேண்டுமானாலும்
அனுபவிக்க தயாராக இருக்கின்றனர்
அங்க பிரதத்ஷனம் செய்ய வேண்டுமா?
மொட்டை போட வேண்டுமா?
பல நூறு கிலோமீட்டர் நடந்து பாதயாத்திரை செல்ல வேண்டுமா?
ஆடு கோழி பலி கொடுக்க வேண்டுமா?
இல்லை நர பலி கொடுக்க வேண்டுமா?
தங்க தேர் இழுக்க வேண்டுமா?
யாகம்,ஹோமம் பண்ண வேண்டுமா?
கிரி வலம் வர வேண்டுமா?
இல்லை தீ மிதிக்க வேண்டுமா?
இல்லை உடல் முழுவதும் அலகு குத்திக்கொள்ள வேண்டுமா?
மண்டையில் தேங்காயை உடைத்துக்கொள்ள வேண்டுமா?
இன்னும் எத்தனையோ பிரார்த்தனைகள்
கணக்கே இல்லை
இவையெல்லாம் எதற்கு செய்ய வேண்டும்
நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல்
நாம் ஏழையாகவோ,செல்வந்தனாகவோ இருக்கபோகிறோம்
நமக்கு நல்ல வாழ்க்கை அமைவதும் அதை பொறுத்ததே
பின் எதற்காக இத்தனை துன்பங்களை வேண்டி விரும்பி
ஏற்றுக்கொண்டு துன்பப்படவேண்டும்
நம் விருப்பம் நிறைவேறிவிட்டால்
அத்தோடு முடிவடைந்துவிடுமா நம் கோரிக்கைகள்?
ஒரு ஆசை முடியும் முன்பே அடுக்கடுக்காக ஏராளமான
ஆசைகள் வரிசையில் நிற்கின்றனவே?
ஆனால் இதையெல்லாம் யாரும் எண்ணி பார்ப்பதில்லை
அவர்களை சுற்றி இருப்பவர்களும் அவர்களை சிந்திக்க விடுவதில்லை
பொறுமையாக சிந்தித்தால் இவையெல்லாம் தேவையா என்று புரியும்
இந்த மாயையிலிருந்து விடுபடுவது மிக கடினம்
அதற்க்கு இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்
அப்போதுதான் வெற்றி கிடைக்கும்

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?
நிச்சயம் கிடைக்க போவதில்லை
எவ்வளவு காலம்தான் புராணங்களையும் பக்தி நூல்களையும் படித்து கொண்டிருப்பது?
எவ்வளவு காலம்தான் சித்தர்களையும் சாமியார்களையும்
கடவுளை காட்டுவார்கள் என்று நம்பி வாழ்நாளை வீணாக்கி கொண்டிருப்பது?
யாரும் எதுவும் காட்டபோவதில்லை
எவ்வளவுதான் சாத்திரங்களை கற்றாலும்
ஒன்றும் கடவுளை பற்றி அறிந்துகொள்ளமுடியாது
மனம் அடங்காமல் ஒன்றும் தெளிவாகாது
சினம் அடங்காமல் உள்ளத்தில் அமைதி பிறக்காது
ஆசைகள் இருக்கும்வரை மனம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்
ஆசைகளை அழிக்கமுடியாது. முதலில் அதன் எண்ணிக்கையை குறைத்து
இறைவனிடம் மட்டும் ஆசையை வளர்த்துகொள்ளவேண்டும்
அந்த ஆசை பலன் கருதா பக்தியாக கனிய செய்ய வேண்டும்
இறைவனிடம் பக்தி ஒன்றினால் மட்டுமே
அவனை அடைய முடியும்
ஒன்பது விதமான பக்தியில் நண்பனாக,குழந்தையாக தந்தையாக என
அவரவருக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து
இவ்வுலக கடமைகளை அந்த பாவனையுடன் ஆற்ற பழக வேண்டும்
அதை விடுத்து மலருக்கு மலர் தாவும் வண்டு போல்
எந்த முறையிலும் நிலைத்து நிற்காமல் போய்கொண்டிருந்தால்
எதுவும் சித்திக்காது
வாழ்நாளும் முடிந்துவிடும்

Thursday, December 1, 2011


இன்று யோகி ராம்சுரத்குமார் பிறந்தநாள்
காசியில் பிறந்து அண்ணாமலையில் சுற்றி திரிந்து
அங்கேயே அயிக்கியமான மகான்
ராம நாமத்தை ஜபித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்
என்று நம் கண் முன்னே நிரூபித்து காட்டியவர்
அவர் காட்டிய வழியில் சென்று நாமும் உய்வோம்