இந்த உலகையும் படைத்த ஒருவனை
இறைவன்என்று நம்புகிறார்கள்
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தங்களை
கூறிகொள்ளும் நாத்திகர்கள் கூட தங்களுக்கு
புரியாமல் இருக்கும் விஷயங்களை இயற்க்கை என்று
பெயர் சூட்டி மக்களை குழப்புகின்றனர்
அறிவுடையவன் அவனை பற்றி
அறிந்து கொள்ள பல சாத்திரங்களை
படித்து பல வழிகளில் இறைவனை புரிந்து
கொள்ள கடும் முயற்சிமேற்கொள்ளுகிறான்
அவனுக்கு குழப்பம்தான் முடிவில் மிஞ்சுகிறது
ஏனென்றால் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வழியை கூறுகின்றன
ஒரு சாத்திரம் கூறும் வழியை மற்றொரு
சாத்திர ஆசிரியர் ஏற்றுகொள்ளமறுப்பதுடன்
கண்டிக்கவும் செய்கின்றார்
அதனால் ஒவ்வொரு முறையையும்
பரிசீலித்து பார்ப்பதிலேயே அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது
பலபுராணங்களை இயற்றிய வியாச பகவானே
மன அமைதியின்றி பகவான் கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் பக்தி இலக்கியத்தை இயற்றி
மன அமைதி அடைந்தார்.என்பது உண்மை
சாத்திரங்களை வாழ்நாள் முழுவதும் படித்துகொண்டிருப்பதில்
யாதொரு பயனும் இல்லை
அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும்
படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும்
அதிகரிக்கும் அதனால் ஆன்மீகத்தில்
எந்த முன்னேற்றமும் ஏற்ப்படாது
ஏதாவதொரு வழியை பின்பற்றி நம்பிக்கையுடன்
மன உறுதியுடன் இறைவனை அடைவதற்கு
முயற்சி செய்பவனே வெற்றி காண்கிறான்
பாமரர்கள் அவன் மீது கள்ளமற்ற உள்ளத்துடன் பக்தி செய்து
மிக சுலபமாக அவன் அருளை பெற்றுவிடுகின்றனர்
என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன
"அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் அதிகரிக்கும்"
ReplyDeleteஅப்படி வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் வருவதற்கு ஏன் படிக்க வேண்டும்? அது முழுமையான கல்வியே அல்ல.
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
eppadiyaavathu paditthal nanru .Pinbu vaazhvil adipattu thiruntha vaaippu kidaikkum
ReplyDelete