என் உள்ளம் வெள்ளை என்றால் என்ன பொருள்?
சிலர் சொல்வார்கள்
உண்மையை உள்ளபடி உரைப்பவர்கள்
அப்படி உரைப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி
சிந்திக்காமலே
சிலர் பொருள் கொள்ளுவார்கள்
குழந்தை போன்ற உள்ளம் கொண்டவர்கள்
குழந்தைகள் உடனே அனைத்தையும் மறந்துவிட்டு
உடனே நடப்பதை ஏற்றுகொள்ளும்
அது குழந்தையாக இருக்கும்போது சரியாக வரலாம்
வளர்ந்த பிறகு அந்த குணம் சரிப்படுமா?
நமக்கு கெடுதலை செய்தவர்களை பழி
வாங்காமல் எப்படி இருக்க முடியும் ?
நம்மை வெறுத்து ஒதுக்கியவர்கள் மீது
அவர்கள் செயலை மறந்து எப்படி நாம் அன்பு
காட்ட முடியும்?
இப்படியாக சிந்தித்து கொண்டு
போனால் வாழ்வில் போராட்டங்களுக்கும்
துன்பங்களுக்கும்
நம் முடிவு வரை முடிவில்லை
பழி வாங்கும் எண்ணம் நீங்க வில்லை என்றால்
அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து
போய்கொண்டிருக்கும்
சரி. இனி தலைப்புக்கு வருவோம்
திரைப்படம் காட்டப்படும் திரை வெண்மையாக இருக்கிறது
படம் காட்டப்படும்போது பல வண்ணங்களில்
அது ஜொலித்தாலும் படம் காட்டி முடிந்த பிறகு
அது வெண்மையாகவே காட்சியளிக்கிறது
ஒவ்வொருமுறை காட்டப்பட்ட படங்களின் வண்ணங்களை
அது அப்படியே வைத்திருந்தால் மீண்டும் மீண்டும் படம்
அதில் பார்க்க முடியுமா?
அல்லது படங்கள் நன்றாகதான் தெரியுமா?
அதைபோல்தான் நம்முடைய மனமும் ஒரு வெள்ளை திரை
நாம் ஒவ்வொருமுறை கண் விழித்து படம் பார்க்கிறோம்
தூங்கும்வரை அப்போது நடைபெறும் அனைத்து உணர்ச்சிகளும் திரையிலேயே பசை போல் ஒட்டிகொள்கின்றன
அவை கோபமோ,தாபமோ , துக்கமோ,
மகிழ்ச்சியோ நம் மனத்திரையில் தங்கிவிடுவதால் நம்மால்
நம் வாழ்க்கை படங்களை சரியாக காண விடாமல் அமைதியின்றி தவிக்கின்றோம்
எனவே அடுத்த முறை படம் கண்டு மகிழ வேண்டுமென்றால்
நம் மனத்திரையை வெள்ளையாக வைத்துகொள்வோம்.
ஏற்கெனவே கண்ட காட்சிகளை மறந்துவிட்டு
தினமும் புதிய புதிய காட்சிகளை கண்டு மகிழ்வோம்
இரவு உறங்கியவுடன் நாம் இறந்து மீண்டும் விழிக்கும்போது
புதிய பிறவி எடுப்பதால் முக்கியமாக பழைய தீய நினைவுகளை மறந்து
தினமும் புதிய சிந்தனைகளுடன் இன்பமான வாழ்வை எதிர்கொள்வோம்
அதற்க்கு மிக எளிய வழி நாம் யாரை சந்தித்தாலும்
அவர்களை பற்றிய எண்ணங்கள் நம் மனதில் எழாது
அவரை அப்போதுதான் முதல்முதலாக சந்திப்பதாக கருதி
அவருடன் நல்லுறவை பேண முயற்சிக்கவேண்டும்
.
மிக குறுகிய காலமே இந்த உலகில் வாழ போகும் நாம்
இருக்கும் காலம் வரை பிறருடன் அன்பாக,
நல்ல உறவை பேணி திருப்தியாக மன அமைதியுடன்
வாழ முயற்சி செய்ய வேண்டும்
இந்த அணுகுமுறை நிச்சயம் பலன் தரும்

திருப்தியாக மன அமைதியுடன்
ReplyDeleteவாழ முயற்சி செய்ய வேண்டும்.
அருமையான வரிகள் நண்பரே!
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
நன்றி நண்பரே
ReplyDeleteஇருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் கற்றவனால்தான் எந்நிலையிலும்
இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
இல்லாவிடில் அவன் பிலாக்கணம்பாடியே
கிடைத்தற்கரிய வாழ்வை சோகமயமாக்கி கொள்வான்