Thursday, December 8, 2011

உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?




கிடைத்தற்க்கரிய இந்த மனித பிறவி கிடைத்தும்
இந்த மனித குலம் பிறவியின் நோக்கத்தை மறந்து
வாழ்நாள் முழுவதும் கிடைத்ததைஎல்லாம்
வயிற்றுக்குள் தள்ளுவதுதான் தன கடமையாக
நினைத்துக்கொண்டு மடமையுடன்
செயல்பட்டுகொண்டிருப்பது
வேதனைக்குரிய விஷயம்

ஒருநாள் பிணமாக போகும் மனிதன் பிற உயிர்களை கொன்று
அவைகளை விதவிதமாக சமைத்து தன உடலை கொழுக்க வைக்கின்றான்.
கொழுத்த உடல் பருத்து நோய்களின் இருப்பிடமாகி மடிந்து போய்
பருந்துகளுக்கும்,நரிகளுக்கும்,நாய்களுக்கும்,நெருப்புக்கும்  இரையாகி
போவதை தினம் தினம் கண்ணுற்றும் அவன் மனதில் எந்த சலனமும் ஏற்படுவதில்லை

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் .
உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே
என்றார் திருமூலர்

உயிர் அழியாமலிருக்க உடலை வளர்க்கத்தானே சொன்னார்
காண்பதனைத்தையும் தின்று கொழுக்க அல்லவே

உடலை வளர்த்தால் மட்டும் போதாது
உயிரையும் வளர்க்க வேண்டும் என்று சொன்னதை
மனிதர்கள் ஏன் மறந்தனர்?

உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?

இந்த ஊனுடலில் உத்தமன் கோயில் கொண்டுள்ளான்
என்பதை அறிந்து தெளிந்ததை நமக்கெல்லாம்
புரியும்படி  விளக்கியுள்ளார்

அந்த உயிரின் துணை கொண்டு இந்த உடலில் உறைந்து நம்மையும்
இந்த உலகனைத்தையும் இயக்குகின்ற ஒலி மற்றும்  ஒளி வடிவான
இறைவனை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
புற இருள் நீங்க உலகில் தீபம் ஏற்றி வழிபடுதலும்
அக ஒளியான இறைவனை காண சத்தியத்தையும்
கடைபிடிக்க சொன்னார்கள் ஆன்றோர்

கார்த்திகை தீப திருநாளில் இந்த சிந்தனையை மனதில் நிறுத்தி
கிடைத்தற்கரிய இப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குவோம்

வயிற்றை மட்டும் நிரப்பும் பணியை மட்டும் எந்நேரமும் செய்யாமல்
மணிவயிறு வாய்த்த கோசலை மகனான ராம நாமத்தை
உச்சரித்து உய்வடைவோமாக 


No comments:

Post a Comment