Wednesday, December 14, 2011

மனம் என்பது ஒரு கட்டுபாடற்ற சக்தி அதை ஒருமைபடுத்தி அதிக சக்தியை பெறலாம்

நாம் காண்பதனைத்தும் உண்மையா?

நம்முடைய கண் என்னும் கருவி மூலம்
காண்பது உண்மையின் பிரதிபலிப்பா?

கண்ணால் கண்ட காட்சியை மனம் ஒருவாறு பார்க்கிறது
புத்தி ஒருவாறு புரிந்து கொள்கிறது

ஆனால் உண்மை என்ன என்பதை எப்படி அறிந்துகொள்வது?
மனம் என்பது கடந்த கால பதிவுகளின் தொகுப்பு
எந்த காட்சியை கண்டாலும் ஏற்கெனவே அக்காட்சி தொடர்பாக
மனதில் உள்ள காட்சி பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து
முடிவுக்கு வரும்
அது சரியா தவறா என்பதை புத்திதான் முடிவு செய்யும்

மனதில் எந்த விதமான எண்ணங்கள் நிறைந்திருக்கிறதோ
அதை பொறுத்துதான் அதன் செயல்பாடு இருக்கும்
தீயவர்களோடு அது தொடர்பு கொள்ளும்போது பிறரை பாதிக்கும் தீய முடிவுகளையும் நல்லவர்களோடு தொடர்புகொள்ளும்போது பிறருக்கு நன்மை பயக்கும் முடிவுகளையும் எடுக்கும் .
இதில் குழப்பம் ஏற்படாமல் தடுக்க புத்தியினால்தான் முடியும்

மனம் தன்னிச்சையாக தவறாக முடிவுக்கு வரும்போதுதான் மற்றவர்கள் உனக்கு புத்தி இருக்கிறதா என்று கேள்வி கேட்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள்

மனம் என்பது ஒரு கட்டுபாடற்ற சக்தி
அதை ஒருமைபடுத்தி அதிக சக்தியை பெறலாம்
அதை கொண்டு இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை

இறைவனை அடையவும் மன ஒருமைப்பாடு  தேவை
மன ஒருமைப்பாடுடன் இறைவனை தியானித்தால் இறைவனை அடையலாம்
அதற்க்கு தியானம் செய்யவேண்டும்

அதற்க்கு நல்ல புத்தியை இறைவனிடம் வேண்டி பெறவேண்டும்
அதனால்தான் திருமூலரும் இறைவனை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன் என்று கூறியுள்ளார்
.
தொண்டரடிபொடி ஆழ்வாரும் தான் இவ்வுலகில் பட்ட துன்பங்களிலிருந்து
இறைவன் தன்னை விடுவிக்க 'போதரே என்று என் புந்தியுள்புகுந்தே  'என்று
திருமாலையில் கூறியுள்ளார்
.
இறைவன் நம் புத்தியில் புகுந்து நம்மை நல்வழியில்  அழைத்து செல்லுமாறு வேண்டுவோம்.


1 comment: