கடவுள் பற்றிய இலக்கியங்களின் உண்மை பொருளுணராது
அவைகளை பழித்தும்,திரித்தும் ,இழிவு படுத்தியும்
மக்களின் மனதில் கடவுளை பற்றிய காலம் காலமாக
இருந்த நம்பிக்கைகளை அகற்ற கடும் முயற்சிகளை
செய்தனர் நாத்திகவாதிகள் .
ஆனால் இன்று ஆன்மிகம் கரை புரண்டோடுகிறது
லட்சகணக்கான மக்கள் விரதம் இருக்கின்றனர்,
ஆலயங்களுக்கு செல்கின்றனர்.
வழிபாடுகள் செய்கின்றனர்.
நாத்திகம் பேசும் பகுதறிவாதிகளின் குடும்பத்தினரே அவர்களின்
பேச்சை கேட்காமல் ஆன்மீகத்தை நாடுகின்றனர்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது ஆதிக்கம்
செலுத்துவதும்,பிறரை இழிவுபடுத்துவதும்
ஆன்மீகவாதிகளை விட இந்த பகுத்தறிவு பேசும்
கூட்டத்தினரிடையே அதிகம் என்பதை சாமானிய
மக்கள் நன்கு அறிவர்
இன்று அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால்
அவர்களிடம் பிழைப்புக்காக நாத்திக வேஷம்
போடுகின்றனரே தவிர
உண்மையில் அல்ல.
கடந்த காலங்களில் கடவுள் மீது பய உணர்வு இருந்ததால்தான்
நதிகள்,நீர் நிலைகள்,ஆலயங்கள் ,பொது இடங்கள் சுத்தமாக
இருந்தன
.நாத்திகம் பேசிய நயவஞ்சகர்களால் இன்று
தெய்வமாக போற்றி வணங்கப்பட்ட நதிகளில்,
இறைச்சி கழிவுகள்,சாய கழிவுகள்,மனித மிருக கழிவுகள் ,
ரசாயன கழிவுகள் அனைத்தையும் விட்டு நாசமாக்கிவிட்டனர்
.
தங்கள் நதிகளிளிருந்துதான் குடி நீரை பெற்று வாழ்கிறோம் என்பதை
சிந்தித்து பார்ப்பதேயில்லை .
ஏரிக்கரைகள்,குளக்கரைகள் நதிகரைகள்.கடற்கரைகள்
,காலியாக உள்ள இடங்கள் கட்டிடங்கள்,
சுற்றுலாதலங்கள்,ஆலய சுற்றுபுரங்கள்
என ஒரு இடம்கூட மிச்சம் வைப்பதே இல்லை
எல்லாவற்றிலும், சிறுநீர்கழித்தும் ,மலம் கழித்தும்,
குப்பைகளை கொட்டியும் அசுத்தம் செய்வதையே
தங்கள் இயல்பாக கொண்டுவிட்டனர்.
அரசுகள் கழிப்பிடங்கள் கட்டி தந்தாலும்
முறையாக பயன்படுத்துவதில்லை.
மேலும் அரசும் அவைகளை தொடர்ந்து பராமரிப்பதில்லை.
சுத்தம்தான் தான் கடவுள்
அதை புறக்கணித்துவிட்டு மற்ற புற வழிபாடுகள்
அனைத்தும் அனுசரிப்பது நம்மை நாமே
ஏமாற்றி கொள்ளும் செயலாகும்
இயற்கையை அசிங்கபடுத்தும் இந்த மூடர்களுக்கு
இறைவன் அருள் கிடைக்கும் என்பது கானல் நீரே .
அருமை!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பா!