Thursday, December 22, 2011

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும் நம்மால் ஏன் அவரை காண முடியவில்லை?

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும் 
நம்மால் ஏன் அவரை காண முடியவில்லை?

அதற்க்கு காரணம் நம் மனம்தான்
நம் மனதில் கடவுளை பற்றிய பலவிதமான
கற்பனைகள் நிறைந்துள்ளன
பொதுவாக நாம் கடவுளை பல வடிவங்களில் இருப்பதாக 
கற்பனை செய்து வைத்துகொண்டு 
அதை கடவுள் என்று வழிபடுகின்றோம் 
இந்த எண்ணம் எல்லோரின் மனதிலும் 
ஆழமாக பதிந்துவிட்டது

பிறந்ததிலிருந்தே நாம் அப்படிதான் வழிபாடு 
செய்ய கற்பிக்கபட்டிருக்கிறோம்
அந்த எண்ணத்தை தாண்டி நம் சிந்தனை செல்வதில்லை 
அப்படி செல்லவும் நம்மை சுற்றியுள்ளவர்களும் 
நம்மை விடுவதில்லை
கோடிகணக்கான மனிதர்களில் பகவான் ரமணர் 
போன்றவர்கள்தான் இந்த எண்ணத்திலிருந்து 
வெளியே வந்து சில உண்மைகளை 
வெளிப்படுத்தி அதன்படி வாழ்ந்தும் காட்டினர்

ஆனால் அவர் வெளிபடுத்திய உண்மைகளை இந்த உலகம் 
இன்னும் புரிந்துகொள்ளவில்லை 
மாறாக அவரையே கடவுளாக்கி சிலை வைத்து
கோயில் கட்டி வழிபாடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்

எத்தனையோ மகான்கள் புற வழி பாடுகளை 
மேற்கொண்டாலும் அவர்கள் எழுதிய நூல்களில்
தெளிவாக இறைவன் நமக்குள்ளேதான் இருக்கின்றான் 
என்று எழுதி வைத்துள்ளதை யாரும் கவனிப்பது கிடையாது
அக வழிபாட்டிற்கு முக்கியத்வம் அளிக்காமல் புற வழிபாட்டிலேயே 
தங்கள் வாழ்நாள் முழுவதையும் வீணடித்து இறைவனை 
அறியாமலேயே மீண்டும் பிறப்பு இறப்பு சுழலில் 
சிக்கிக்கொண்டு அவதி பட்டுகொண்டிருக்கின்றனர். 

2 comments:

  1. அருமையாகச் சொன்னீர்கள். எம்மை நாமே சரியான முறையில் செயல் படுத்தினால் எமது மூளைக்கும் பலதடவை அறிவுறித்தினால் ஆண்டவனை நாட வேண்டிய அவசியமே இல்லை.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி
    நம்மை சரியான முறையில் செயல்படுத்த நல்லோர்
    கூட்டுறவு தேவை
    தீயவர்களோடு சேர்ந்தால் தீமையே விளையும்
    உடலில் மூளை என்பது ஒரு கருவி மாத்திரமே
    அது இயங்க சக்தி அளிப்பவன் அந்த இறைவனே
    இறைவன் நம் உடலில் இருக்குமிடம் இதயம்
    எல்லா உயிர்களிடத்தும் அன்பு இருந்தால்
    அவன் நம்மில் வெளிபடுவான்
    செயல்களை நான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன்
    செய்தால் அது பற்று.
    அது நம்மை வினைகளில் சிக்க வைக்கும்
    வினைபயனால் கிடைப்பது மீண்டும்முடிவு காண இயலா பிறவிகள் .
    செயல்களை இறைவன் நம் மூலம் செய்கின்றான்
    நாம் அவன் கையில் ஒரு கருவியே என்ற எண்ணம் இருந்தால்
    வினைபயன் நம்மை அண்டாது
    அதை விடுத்து நான் என்ற அகந்தையுடன் ஒவ்வொரு செயலையும் செய்தால் நம் துன்பங்களுக்கு என்றும் முடிவில்லை

    ReplyDelete