Saturday, December 10, 2011

பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்
பல வழிகளில் கடவுளை தேடுகிறார்கள்
பலர் தாம் வாழும் இந்த உலகில்  தேடுகிறார்கள்.
சிலர் புத்தகங்களில் ,சிலர் தம் உள்ளத்தில்,
சிலர் மனிதர்களிடத்தில் என தேடல் பலவாறாக உள்ளது.
ஆனால் வெற்றியடைவது கோடியில் ஒருவரே.
அப்படிப்பட்ட சிலர் அந்த இன்பத்தில் மூழ்கி
அமைதியாக இருந்து விடுகின்றனர்.
ஒரு சிலர் அந்த அனுபவத்தை
மற்றவருக்கு சொல்ல முற்படுகின்றனர்.
ஆனால் உலக மாயையில் மூழ்கியிருக்கும் மக்கள்
அவர்கள் கூறுவதை செவி மடுப்பது கிடையாது.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற
ஏதாவது மார்க்கம் கோரி அவர்களை
துன்புறுத்துவதால் அவர்கள் வெறுப்படைந்து
மக்கள் முன் தோன்றாமல் தங்களை
மறைத்துக்கொண்டு வாழுகின்றனர்.
உலக வாழ்வோடு ஒட்டாமல்
உலக கடமைகளை பற்றில்லாமல் செய்து 
இறைவனை தேடுவது பகவத் கீதையில்
பகவான் காட்டிய சுலபமான வழி.
பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும்
மூல காரணம் .
ஒரு பொருள்,ஒரு மனிதர் மீது
பற்று வைக்கும்போதுதான்
,விருப்பு வெறுப்புகள்,ஏமாற்றங்கள்,
துன்பங்கள் ஏற்படுகின்றன
அதனால்தான் பாவ புண்ணியங்கள்
விளைகின்றன
அவைகள் சேர சேர பிறவிகளின்
எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது
இதை உணர்ந்து கொண்டு
ஆன்மாவை தேடும்  பயணத்தில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 

1 comment:

  1. நன்றி ரத்தினவேல் அவர்களே.
    நல்ல எண்ணங்களே நல்ல செயல்களுக்கு வித்திடும்
    நாமும் மகிழ்ச்சியாக வாழ்வோம் பிறரும் மகிழ்ச்சியாக வாழ நம்மால் ஆன உதவிகளை செய்வோம் .எண்ணம்,சொல்,செயல் என ஏதாவது ஒரு வகையில்.

    ReplyDelete