Sunday, December 11, 2011

திருந்திய வாழ்க்கை அமிழ்தினும் இனிது என்றார்

இன்று உலகத்தில் தீய செயல் புரிபவர்களின்
எண்ணிக்கை பெருகிவிட்ட்டது

பிறரை துன்புறுத்தும்,வஞ்சிக்கும்,சுரண்டும்,
ஏமாற்றும் குணங்கள் ஒரு தனி மனிதனின் மனதில் தொடங்கி
,குடும்பத்தில் பரவி ,இன்று உலக அளவில் தீரா வியாதியாய்
மனித குலத்தை நிம்மதியாக வாழ முடியாமல் செய்துகொண்டிருக்கிறது
.
அவ்வப்போது தீயவர்கள்  அழிக்கபட்டாலும் அவர்கள் விட்டு சென்ற பணிகள்
தயவில்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றன என்ன சிகிச்சை அளித்தாலும்
சாகா வரம் பெற்ற முற்றிய  புற்று நோய் செல்கள் போல
.
நாளுக்கு நாள் விதவிதமான தீய செயல்கள் இவர்கள் மூலம் அரங்கேறிகொண்டிருக்கின்றன
.மக்களை ஆட்சி செய்யும் கூடாரத்திலும்
தீயவர்கள் நிறைந்திருப்பதால் அவர்கள் ஆளும் நாட்டு மக்களுக்கும் நிம்மதியில்லை,பாதுகாப்பில்லை,வசதியான வாழ்க்கையுமில்லை
.
வளம் கொழிக்கும் நாடுகள் வளம் குறைந்த நாடு மக்களிடையே சண்டைகளை மூட்டி அவைகளை ஒருவொருக்கொருவர் அழித்துக்கொண்டு சாவதை கண்டு ஆனந்தப்படும் வக்கிர புத்தியே மேலோங்கிகொண்டிருக்கிறது

இதற்க்கு மூல காரணம் இன்று மக்களிடையே ஒழுக்கம் இல்லை,நேர்மை இல்லை,அன்பில்லை,நல்லொதொரு பண்பு எதுவும் இல்லை
.
சுயநலமும்,பொறாமையும்,போட்டி மனப்பான்மையும்,பெருகிவிட்டதால்
மனித நேயமே அற்றுபோயவிட்டது

எண்ணங்கள் நல்லவையோ அல்லது தீயவையோ அவைகள் அழிவதில்லை
.
ஒரு கொடியவன் அழிக்கபட்டால் அவன் உடல்தான் அழிகிறதே தவிர அவன் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிவதில்லை

அதனால்தான் அவன் மீண்டும் இவ்வுலகில் வேறொரு உருவில் தோன்றி மக்களை துன்புறுத்துகிறான்.

எனவேதான் ஒரு மனிதன் இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள தீய குணங்களை விட்டுவிடவேண்டும் திருந்தி வாழ வேண்டும்.
 .
இறக்கும்போது தூய மனதுடன் இந்த உடலை விட்டால் அவனால் இந்த உலகத்திற்கு மீண்டும் துன்பங்கள் நிகழ வாய்ப்பில்லை
தவறுகள் செய்வது மனித இயல்பு

அதனால்தான் திருந்திய  வாழ்க்கை
அமிழ்தினும் இனிது என்றார் நம் முன்னோர். .
.  

3 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி.
    தீயவை தீய பயத்தலால் தீயினும் அஞ்சப்படும்
    ஆனால் தீயவர்கள் தீயை விட கொடியவர்கள்
    எச்சரிக்கையாய் இல்லாவிடில் தீயைப்போல்
    எரித்து சாம்பலாகிவிடுவார்கள்

    ReplyDelete
  3. அருமை!
    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete