சங்கடங்களை அழிக்கும்
ஸ்ரீ கணேசர் தோத்திரம் (பகுதி-1)
நாம் வாழும் இந்த உலகத்தில்
எந்த செயல் செய்யவேண்டுமென்றாலும்
அதற்க்கு ஒரு எதிர் சக்தி இருக்கவேண்டும்.
இல்லாவிடில் செயல் அல்லது வினை நிகழாது.
தீக்குச்சியை ஒரு சொரசொரப்பான பகுதியின்
மேல் உரசினால்தான் தீ வரும்.
பாலை கடைந்தால்தான் வெண்ணை வரும்.
நேர்மறை மின்சாரமும் எதிர்மறை மின்சாரமும்
ஒரு கருவியில் செலுத்தினால்தான் கருவி இயங்கும்.
இவ்வாறு இறைவன் ஒவ்வொரு செயலுக்கும்
ஒரு எதிர் விளைவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.
என்னே அவன் மகிமை. !
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மின் காந்த சக்தி உள்ளது
அதனால்தான் அண்டங்களில் கோடிகணக்கான கோள்கள்
ஒன்றைஒன்று மோதிக்கொள்ளாமல்
அதனதன் பாதையில் நெடுங்காலமாய் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
மனிதர்களுக்கு மனம் என்ற ஒரு அதிசயிக்கும்
சக்தியை இறைவன் அழித்திருக்கின்றான்.
அதனால்தான் சிலர் மீது நாம் அன்பு கொள்கிறோம்,
சிலரை வெறுக்கிறோம்.
சிலரிடமொன்றும் ஈடுபாடு கொள்வதில்லை.
சிலரிடம் மோதுகிறோம்.
சிலரிடம் வாதிடுகிறோம்.
இப்படியாக எத்தனையோ
வினோதங்கள் இறைவன் படைப்பிலே.
சங்கடங்கள் வாழ்க்கையில் இல்லை
என்றால் வாழ்வே இல்லை
உரசல்கள் இல்லையென்றால்
இன்பங்களும் இல்லை
துன்பங்களும் இல்லை
முன்னேற்றமும் இல்லை
இறைவன் ஏற்படுத்திய
இந்த ஏற்பாடு வியந்து ரசிக்கத்தக்கது.
ஆனால் இந்த தத்துவத்தை
மனிதர்கள் புரிந்துகொள்ளாமல்
வாழ்வில் சங்கடங்கள் என்னும் தடைகள்
ஏற்பட்டால் கலங்கி தவிக்கின்றனர்
அதை புரிந்து கொள்ளாது அதை போக்க
பல வழிகளை நாடுகின்றனர். பல
முறைகளை அனுசரிக்கின்றனர்.
இதனால் பலர் பிழைக்கிறார்கள்
பலர் இருப்பதையும் இழக்கிறார்கள் .
போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலையில்
வேக தடைகள் இல்லையென்றால்
என்ன ஆகும்.?
விபத்துக்கள் மக்கள் உயிரை குடிக்கும்.
அப்படியும் அதை மீறுபவர்கள்
எமனுலகிர்க்கு இவ்வுலகில் அவர்கள்
காலம் முடியுமுன்பே விருந்தாளிகளாக
சென்று விடுகிறார்கள்.
(இன்னும் வரும்)
விக்னேஸ்வரனின் தத்துவத்திற்கு ஒரு அழகான முன்னுரை என்றே சொல்லவேண்டும்.
ReplyDeleteகணிதத்தில் ட்ரிக்னாமெட்ரியில் எக்ஸ் ஆக்ஸிஸ் ஒய் ஆக்ஸிஸ் வரைந்து ஒரு பாரபோலா வரைந்து கொள்ளுங்கள்.
இந்த பாரபோலாவின் துவக்கம் 0,0 என்ற புள்ளியில் இருந்து தோன்றி, இரு பக்கமும், அதாவது இடது மைனஸ் , வலது
பக்கம் ப்ளஸ் பக்கமும் விரிந்து கொண்டே செல்கின்றது. இந்த பாரபோலா அண்டம் போலே. விரிந்து கொண்டே செல்லும்.
முடிவில்லா அகண்டத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.
இந்த பாரபோலாவில் ஒவ்வொரு ப்ளஸ் பாயின்ட்டுக்கும் ஒரு மைனஸ் பாயின்ட்டும் இருக்கிறது. +3 +3 க்கு இணையாக
-3 + 3 என்ற ஒரு புள்ளி. இவை இரண்டுமே ஒன்றோறொன்று இணையாக ஆனால் எதிராக இருக்கிறது. ஆங்கிலத்தில்
செல்ஃப் பாலன்ஸிங்க் ஃபோர்ஸஸ் என்று சொல்லலாம்.
உலகத்திலும் அது போலவே நல்லவையும் கெட்டவையும் இணைந்து இருக்கின்றன. ஆனால் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கின்றன.
இவை ம்யூசுவலாக கான்ஸல் செய்துகொள்ளவும் செய்கின்றன. ஆகையால் தான் உலகம் முன்னேறுகிறது. த வேர்ல்டு இஸ் நதிங்
பட் செல்ஃப் பாலன்ஸிங் ஆஃப் ம்யுசுவல் ஆப்போசிட் பட் இகுவல் ஃபோர்ஸஸ்.
இந்த தத்துவமே வினாயகனின் உள்ளிடை என நினைக்கிறேன்.
விக்னேஸ்வரன் விக்னங்களை அதாவது தடைகளை உண்டு பண்ணுவதும் அவனே.
விக்னேஸ்வரன் விக்னங்களை நீக்கி அத்தடைகளிலிருந்து நம்மைக் காப்பவனும் அவனே.
விக்ன வினாயக பாத நமஸ்தே.
சுப்பு தாத்தா.
வருகைக்கு நன்றி
Deleteதங்களின் விளக்கம் அருமை.
இருளை விலக்குவது விளக்கின் ஒளி
அறியாமையை விலக்குவது
அறிஞர்களின் விளக்க உரை
அது போன்று அமைந்துள்ளது
உங்கள் கருத்துக்கள்