Thursday, September 18, 2014

குண்டு சட்டியில் எவ்வளவு காலம் குதிரை ஓட்டுவது?




குண்டு சட்டியில் எவ்வளவு காலம் 
குதிரை ஓட்டுவது?

ஆம்.கை தவறி விழுந்தால்
சுக்கல் சுக்கலாக உடைந்துபோகும்
இந்த உடல் என்னும் குண்டு சட்டியில்
எத்தனை பிறவிகள் மனம் என்னும் குதிரை மீதேறி
செக்கு மாடுகள்போல்  சுற்றிக்கொண்டிருப்பது?




இதிலிருந்து வெளிவரவேண்டாமோ?

விடுதலை பெற்று  நிலையான இன்ப துன்பம் கடந்த
எல்லையில்லா ஆனந்தத்தில் திளைக்க வேண்டாமோ?

அதைப் பற்றிய சிந்தனைதான் இந்த
பதிவு.

அவரவர் மனம்தான் அவரவர்களுக்கு
அவரவர்களின்  உலகமாக தோற்றமளிக்கிறது.

மனதில் எண்ணங்கள் இல்லாவிடில்
உண்மையான உலகம் என்ன என்பது புரியும் .

ஆனால் உலகத்து மோகத்தில் மூழ்கியுள்ள
 மக்கள் அவரவர் எண்ணங்களை விட்டு வெளியே வருவதேயில்லை.
சோகம் அனுபவிப்பதையே சுகம் என்று எண்ணிக்கொண்டு
குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.


இறைவன் ஒவ்வொரு முறையும் நாம் இருக்கும்  குண்டு சட்டியை (உடலை)உடைக்கிறான். அப்போது உண்மை புரிகிறது. 


அனால் அந்த உண்மை மின்னல்போல் உடனே மறைந்துவிடுகிறது 

நம்முடைய மனதில் எண்ணங்கள் அப்படியே இருப்பதால் அதிலிருந்து வெளிவர முயற்சி செய்ய மீண்டும் மற்றொரு குண்டு சட்டியை அளிக்கிறான்.

 முட்டையை  உடைத்துக்கொண்டு பறவை வெளிவருவதுபோல் நாமும் கணக்கற்ற பிறவிகளாக  நாமே  நாமே சுற்றிக் கட்டிக்கொண்ட கோட்டையை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெறும்  வரையில் இந்த குண்டு சட்டிக்குள்தான் கிடந்தும் துன்பம், வேதனைகள், சோதனைகள், போன்ற தீயில் வறுபடத்தான்  வேண்டும். பஞ்ச  பூதங்களால் துன்பத்து ஆளாகித்தான் தீரவேண்டும்.

குண்டு சட்டியை உடைத்துக்கொண்டு வெளியே வரும் சுதந்திர காற்றை சுவாசித்து ஆனந்தமாக் வாழும் வழியை நாடுவோம்.

படங்கள்-நன்றி google



5 comments:

  1. உண்மை. சிறந்த எண்ணப் பகிர்வு ஸார்.

    ReplyDelete
    Replies
    1. சிறந்தவற்றை
      சிந்திக்கத் தூண்டுபவை
      வாழ்வு மேம்பட
      உதவும் வித்தியாசமான சிந்தனைகளை
      தருவதற்குத்தான்
      இவன் பதிவில் முயற்சி செய்கிறேன்.

      Delete
  2. செம்மையான மனதுடன் வாழ்வோம்
    குண்டுச் சட்டியை உடைத்துக் கொண்டு வெளியே வருவோம் ஐயா
    நன்றி

    ReplyDelete
  3. Kundu sattiyil kuthirai otugiran translation Hindi in English proverb

    ReplyDelete