நினைவுள்ள வரை என் நெஞ்சில்
இருக்கட்டும் உன் நாமம்
எங்கும் நிறைந்தவனே எழில்
வடிவம் கொண்டவனே
ஆதவனின் ஒளியாய் இருக்கின்றாய்
பரம பக்தன் பிரஹலாதன்
வேண்டுகோளை ஏற்று பாரினில்
நரசிங்கனாய் அவதரித்து
ஆணவம் கொண்டு அலைந்த
ஆணவம் கொண்டு அலைந்த
ஹிரணியனை வதம் செய்தாய்
எங்கும் நிறைந்தவனே எழில்
வடிவம் கொண்டவனே கண்ணின்
ஒளியாய் திகழும் கண்ணனே
சொல்ல சொல்ல திகட்டாது உன் நாமம்
சொல்லிக்கொண்டே இருந்தால் போதும்
என்றும் எமை அண்டாது காமம்
கர்ம வலையில் சிக்கித் தவித்த
எமக்கு எளிதில் விடுபடும்
வழியைக் காட்டினாய்
பற்றின்றி செயல்பட்டால் பாவ புண்ணியங்கள்
உம்மை பற்றாது என்று பார்த்தன் மூலம்
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்
உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு
பாரதப் போர் தொடங்கு முன்பு பறை சாற்றினாய்
உன் திருவடியைப் பற்றியவர்க்கு
இகத்திலும் பரத்திலும் பயமில்லை ,
நிலையான இன்பமுண்டு
என்றுரைத்தாய்.
நினைவுள்ள வரை என் நெஞ்சில்
இருக்கட்டும் உன் நாமம்
.உந்தன் கவின் வடிவினைக் கண்டு ஆனந்தம்
அடையட்டும் என் கண்கள் .கண்ணில்
ஒளியிழந்தாலும் இதயத்தில் ஒளியாய்
நிலைத்து நீங்காஇன்பம் தந்திடுவாய்
நானும் இணைந்தே வேண்டுகிறேன்.
ReplyDelete