குறை ஒன்றுமில்லா கோவிந்தன்
நிலமகளும் நீர்மகளும் அருகிருக்க
குன்றின் மேல் நின்று கண்குளிர
காட்சி தரும் கருணை தெய்வம்
குறை ஒன்றுமில்லா கோவிந்தன்
மறைகள் போற்றும் மாலவன்
நம் குறைகளைக் காணாது செய்து
நம்மை உயர்நிலைக்கு கொண்டு
செல்லும் தூயவன்
அடியார்க்கு அடியவன் அனைத்து
உயிர்க்கும் ஆதாரமானவன்
அன்போடு அழைத்தால் அக்கணமே
வந்து காப்பவன்
மனதில்நிறைந்துள்ள பொய்யும்
புரட்டையும் விரட்டி விட்டு
புரட்டாசி மாதம் தன்னில் அவன்
நாமம் சொல்லி அவனின்
தரிசனம் கண்டு ஆனந்தம்அடைவோம்
கோவிந்தன் நாமம் சொல்லி கொண்டு
திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றால்
உடலின் எடையும் குறையும் மனதைக்
கப்பியுள்ள இறுக்கமும் நீங்கும்
வேங்கட மலையின் உச்சியில் நிற்பவனும்
அனலாய் நம் உடலில் பரவி நம்
உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை
வாழ்விப்பவனும் அவன் ஒருவனே.
நம் உயிர்க்கு ஆதாரமாய் விளங்கும்
பாதார விந்தனின் பாதங்களை
எந்நேரமும் சிந்திப்போம் .என்றென்றும்
இன்பமாய் இவ்வுலகில் வாழ்வோம்.
நிலமகளும் நீர்மகளும் அருகிருக்க
குன்றின் மேல் நின்று கண்குளிர
காட்சி தரும் கருணை தெய்வம்
குறை ஒன்றுமில்லா கோவிந்தன்
மறைகள் போற்றும் மாலவன்
நம் குறைகளைக் காணாது செய்து
நம்மை உயர்நிலைக்கு கொண்டு
செல்லும் தூயவன்
அடியார்க்கு அடியவன் அனைத்து
உயிர்க்கும் ஆதாரமானவன்
அன்போடு அழைத்தால் அக்கணமே
வந்து காப்பவன்
மனதில்நிறைந்துள்ள பொய்யும்
புரட்டையும் விரட்டி விட்டு
புரட்டாசி மாதம் தன்னில் அவன்
நாமம் சொல்லி அவனின்
தரிசனம் கண்டு ஆனந்தம்அடைவோம்
கோவிந்தன் நாமம் சொல்லி கொண்டு
திருப்பதிக்கு பாத யாத்திரை சென்றால்
உடலின் எடையும் குறையும் மனதைக்
கப்பியுள்ள இறுக்கமும் நீங்கும்
வேங்கட மலையின் உச்சியில் நிற்பவனும்
அனலாய் நம் உடலில் பரவி நம்
உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை
வாழ்விப்பவனும் அவன் ஒருவனே.
நம் உயிர்க்கு ஆதாரமாய் விளங்கும்
பாதார விந்தனின் பாதங்களை
எந்நேரமும் சிந்திப்போம் .என்றென்றும்
இன்பமாய் இவ்வுலகில் வாழ்வோம்.
No comments:
Post a Comment