Saturday, June 13, 2015

உத்தமன் ஒருவன் உன்னுள்ளே இருக்கின்றான்

உத்தமன் ஒருவன் 
உன்னுள்ளே இருக்கின்றான் 


உத்தமன் ஒருவன்
உன்னுள்ளே இருக்கின்றான்
என்பதை அறியாது
உலகத்தில் உழலும்
மானிடரே

உங்களுக்கு ஓர் உண்மை சொல்வேன்
உள்ளத்தில் கொண்டு உய்வீரே

குடலை நிரப்பவும் உடலை வளர்க்கவும்
விலங்குகள் போல் சுற்றி திரிந்து
மடியவும் இவ்வுலகிற்கு நாம் வரவில்லை
என்பதை உணர்வீரே உணர்ந்து தெளிவீரே

காலைமுதல்  மாலைவரை
கடுமையாய் உழைத்து கல்லையும்
பொன்னையும் சேர்த்து வைத்து
அழகு பார்த்துக் கருமியாய்
வாழ்வதில் பயன் இல்லை

காலன் வரும் நேரத்தில் நம்முடன்
அனைத்தையும் கையுடன்
கொண்டுசெல்ல  இயலாத அவற்றால்
ஏதும்  நன்மை இல்லை

இல்லைஎன்று உன்னை
நாடி வருவோர்க்குஇயன்ற   அளவில்
உதவி செய்தால் போதுமே

பிறர்  மனம் வாட செயல்கள்
செய்யாமலிருந்தாலே நம் வாழ்வு
நல்லவிதமாய் அமையுமே

கடமையை தவறாது செய்பவனும்
கடுஞ்சொல் கூறாதிருப்பவனும்
பிறர் பொருளை அபகரியாதிருப்பவனும்
சத்தியத்தையே பேசுபவனும்
அகிலத்தை  காக்கும் கடவுளை
மறவாதிருப்பவனும் நிலையான
அமைதியும் ஆனந்தமும் வாழ்வில்
பெற்று மகிழ்வது திண்ணமே.









2 comments: