Tuesday, February 9, 2016

மனம் படுத்தும் பாடு (3)

மனம் படுத்தும் பாடு (3)

மனம் இல்லையேல் ஒன்றும் இல்லை

அதுதான் உள்ளதை இல்லாததாக காட்டுகிறது

இருப்பதை இல்லாததாக காட்டுகிறது

அதுதான் நம்மை இன்பத்திலும் ஆழ்த்துகிறது

அதுவே நம்மை துன்பத்திலும் ஆழ்த்துகிறது

அதுவே நம்மை அந்த துன்பத்திலிருந்தும் நம்மை மீட்கும்.
சக்தியாகவும் விளங்குகிறது 

அது நனவுலகில் நிகழ்த்தமுடியாதவற்றை தன் கனவுலகில்

சாதித்துக் காட்டும்.தன்மை கொண்டது 

அதுவே தேவையற்ற பயத்தை உண்டாக்கி நம்மை

நிலைகுலையவும் செய்துவிடும்.

அதுவே நமக்கு அசாத்திய துணிச்சலைக் கொடுத்து நம்மை

மகா வீரனாகவும் ஆக்கிவிடும்.

அதுவே நம்மோடு பல ஆண்டு பழகிய நண்பனை

கண்ணிமைக்கும் நேரத்தில்  பகைவனாக்கும் கொடூர தன்மையும் கொண்டது

அதுவே எதையுமே நம்மை ஆராய்ந்து பார்க்க விடாது செய்து

தீயவர்களின் ஆலோசனையை  நம்பி நம்மை நட்டாற்றில் தள்ளி

மோசம் போகவும் செய்யும்.

மனம் என்பது ஒரு காட்டாறு வெள்ளம் போன்றது

அதுபோல் எந்நாளும் வற்றாது பாய்ந்து கொண்டிருக்கும்

ஜீவ  நதியும் போன்றது.

மனதை சக்தியை சிதறவிடாமல் ஒருங்கிணைத்து, ஒருமையுடன் குவித்து

எவன் ஒரு இலக்கை நோக்கி செலுத்துகிறானோ அவன்தான் வாழ்வில்

வெற்றி பெறுகிறான்.

உலகில் நாம் செய்யும் எந்த செயலானாலும் வெற்றி பெற மனதின்

இன்றியமையாத சக்தி தேவை.

அதுவே நமக்கு நண்பன் .அதுவே நமக்கு பகைவனும் ஆகும்

எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

இருக்கின்ற சக்தியை எதற்கும்  பயன்படுத்தாது சாக்கு போக்கு சொல்லி எல்லாவற்றிற்கும் பிறர் மீது குற்றம் சுமத்தும் குணம்  கொண்டவர்கள் இந்த உலகில் கோடானுகோடி

அவர்கள் என்றும் பிறர்க்கு வாழ்நாள் முழுவதும் அடிமை சேவகம் செய்து அதில்  கிடைக்கும்  அற்ப சுகத்தில் மூழ்கி இடை இடையே பிறர் மீது பொறாமைப் பட்டுக்கொண்டு  புலம்பிக்கொண்டே தங்கள் ஆயுளை  முடித்துக்கொள்ளுபவர்கள்

உலக வாழ்வில் சோம்பேறியாக இருந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருப்பவனும்  ஆன்மீக உலகில் இறைவனிடம் சரணாகதி செய்துவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பவனுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இரண்டு நிலைகளையும் ஒன்றாக கருதி  ஒப்பிட்டு பார்ப்பவன் மகா மூடன்

இரண்டு செயல்களும் வேறு வேறு அதை ஒப்பிட்டு பார்த்தல் சரியல்ல ,

அதன் பார்வை வேறு, நோக்கம் வேறு என்பதை  புரிந்து கொண்டு அந்தந்த

நோக்கத்திற்கு தகுந்தாற்போல் மனதை பயன்படுத்தவேண்டும்.




4 comments:

  1. Mohan Muthusamy
    9:05 PM (1 hour ago)

    to me
    மனம் ஒரு குரங்கு என்பதை மாற்றி அதை நன்கு பயன் படுத்த வேண்டும் என்ற உங்களின் கருத்துடன் அமைந்த கவிதை என் மனதில் நீங்க இடம் பிடித்து உள்ளது நன்றி வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி

      குரங்கு விலங்காய் இருக்கும்போது சேட்டைகள்தான் செய்யும்
      அந்த குரங்குகளில் ஒன்று ராமபிரானிடம் பற்றுக் கொண்டவுடன்
      செயற்கரிய செயல்களை செய்து வரலாற்றில் இடம் பிடித்து விட்டது. என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .நல்ல சத்சங்கம் விலங்கைக் கூட தெய்வமாய் மாற்றும் வல்லமை கொண்டது.

      Delete
  2. Mohan Muthusamy
    10:22 AM (3 minutes ago)

    to me
    அன்புள்ள பட்டாபிராமன் சார்,நூ ற்றுக்கு நூ ற்றுக்கு உண்மை ஆனால் மனம் எப்பவும் கட்டுக்குள் அடங்க மறுக்கிறது இறை சக்தி ஒன்றுதான் அதை அடக்கும் வழி நன்றி வணக்கம்

    ReplyDelete
  3. மனம் என்பதை ஒரு மாட்டிற்கு ஒப்பிடுவார்கள் .
    அதை வழிப்படுத்த பல வழிகள் உள்ளன

    மனம் என்னும் மாடடங்க ஒரு வழி சொல் இறைவா
    என்று கேட்கிறார் ஒரு சித்தர்.

    தமிழில் ஒரு பழமொழி வழக்கில் உண்டு."ஆடி கறக்கிற மாட்டை ஆடி கற-பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கற "என்று

    மனிதர்கள் அவர்களுக்கு சொல்லிவைத்த பழமொழியை
    அது பால் கறக்கும் மாட்டிற்கு என்று நினைத்துக்கொண்டார்கள்.

    ஆடல் பாடலுக்கு மனம் என்றுமே அடிமை.

    அதில் அது தன்னை மறந்து லயித்துவிடும் என்பதை நம் நடராஜபெருமானின் நடனமும் ,கண்ணன் கையில் உள்ள குழலும் நமக்கு உணர்த்துகின்றன .

    இருவரின் ஆடல் பாடலில் அண்ட சராசரமே மயங்கி கிடக்கையில் நம் அற்ப மனம் சுலபமாக தன்னை மறந்து இறை நாட்டம் கொண்டுவிடும்
    .
    இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தங்கள் மனதை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அவன் ஆணைப்படி இவ்வுலக வாழ்வை அமைதியாக ஆனந்தமாக வாழ்கிறார்கள்.

    இதை உணராதவர்கள் எதிலும் நம்பிக்கை இல்லாது குழம்பிப் போய் நிம்மதியின்றி தவிக்கிறார்கள்.

    ReplyDelete