Friday, February 26, 2016

அகிலத்தை காக்கும் அரங்கனே

அகிலத்தை காக்கும் அரங்கனே 




அகிலத்தை காக்கும் அரங்கனே
கோகுலத்தில் அழகனாய் வந்துதித்த கண்ணனே
பக்தரைக் காக்க கால் கடுக்க நடந்த ராமனே
கோயிலில் இன்றும் அழகிய வடிவாய்
காட்சி தந்தருளும் கருணை தெய்வமே
உன்னை என்றென்றும் போற்றி வழிபடும்
என் உள்ளமே .

புறத்தே கண்டு உன்னை தரிசித்த நான்
உன்னை என் அகத்தே கொண்டு எந்நேரமும்
தரிசித்து மகிழ  நினைத்தேன்  ஆனால் அந்தோ!
அங்கே காமம் முதலிய ராவணனின் கூட்டங்களும்
கம்சன் போன்ற ஆணவ பேய்களும் பொறாமை
பேராசைகள் என்னும் துச்சாதனன் கூட்டங்களும்
புகுந்துகொண்டு உன்னை என் உள்ளே
அனுமதிக்க மறுத்துவிட்டதே நான் என்ன செய்வேன்?

அவைகளை விரட்ட பல வழிகளைக் கையாண்டும்
அவைகள் இந்த உடலின் கண் உள்ள ஒன்பது
வாசல்களில் ஒரு வாசல் வழியாக  வெளியேறி
மறு வாசல்  வழியாக மீண்டும் உள்ளே புகுந்து என்னை
உபத்திரவம் செய்வதை நீ அறியாயோ?

பொறியில் சிக்கிய எலிபோல் இவன்  மனம்
படும் பாட்டை அறியாயோ?ஆமையாக அவதரித்த
அரியே தாமதம் செய்யாது அருள்  .புரிவாயே



No comments:

Post a Comment