Thursday, February 25, 2016

சுகங்களை ஏன் வெறுக்க வேண்டும்?

சுகங்களை  ஏன்  வெறுக்க வேண்டும்? 

ஆன்மீகத்தில் ஈடுபடுவோர் சுகங்களை

ஒதுக்கி தள்ள வேண்டும் என்றும்

அப்போதுதான் ஆன்மீகத்தில்

முன்னேற்ற அடைய முடியும்

என்று ஒரு கூட்டம் தவறாக பிரசாரம்  செய்து

மனிதர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி

அவைகளை எதற்கும் உதவாத பயனற்ற வாழ்க்கைக்கு

தள்ளுகின்றன


பல மதங்களில் மிக கடுமையான கட்டுப்பாடுகள்

விதித்து மனிதர்களை சக மக்களிடமிருந்து  பிரித்து

தனிமை சிறையில் தள்ளி ஒரு கற்பனையான

இன்பத்தை நோக்கி வாழ்நாள் முழுவதும்

ஏக்கத்தில் வாழுமாறு செய்து மன நோயாளிகளை

உருவாக்குகிறார்கள்.


எதுவுமே இயல்பாக இருக்க வேண்டும்
அளவோடு இருக்க வேண்டும்.


கற்பனையான  கட்டுப்பாடுகள் அடக்கிவைக்கப்பட்ட
காற்றழுத்தம் போன்றது.


வாய்ப்பு கிடைக்கும் போது 
அது தடைகளை உடைத்தெறிந்து
வெளியேறிவிடும்.

அதனால்தான் மக்களை ஏமாற்றி போலி வாழ்க்கை
வாழும் மத தலைவர்கள்
தங்கள் ஆசைகளை அடக்க இயலாமல்
தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.


அவர்கள் செயல் உலகியல் வாழ்க்கை
வாழும் சாதாரண கொடியவர்களை
விட மோசமாக உள்ளது.

இவ்வுலகில் இன்பமும் துன்பமும்
கலந்ததுதான் வாழ்க்கை

இரண்டையும் அதனதன் போக்கில்
அனுபவித்து அதன் நிலையாமையை
அனுபவத்தில் உணர்ந்து அடங்கினால்
ஆன்மீகம்  தானாகவே சித்திக்கும்

போலியாக தனக்குதானே கட்டுப்பாடுகள்
விதித்துக்கொண்டு தன்னையும் வருத்திக்கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் வருத்திக்கொண்டு
ஆன்மிகம் பயில்வது மூடத்தனம் 

2 comments:

  1. யாருக்கும் பதிப்பில்லாத
    தனக்கும் பாதிப்பினைத் தராத
    சுகங்களை அனுபவிப்பதில்
    நிச்சயம் தவறில்லைதான்

    அருமையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்தினை பதிவு செய்தமைக்கும் நன்றி

      Delete