ஜென்மம் கடைத்தேற
எல்லாமே கற்கள்தான்
இறைவன் பார்வையில்
எல்லாமே கற்கள்தான்
ஆனால் நம் ஒவ்வொருவரின் பார்வையில்
ஒவ்வொரு கல்லுக்கும் ஒரு நாமகரணம்
சூட்டிவிட்டோம்.
ஆபரணத்தில் பதித்து அழகு பார்க்க
பல நிறங்களில் பல பெயர்களில்
எண்ணிலடங்கா கற்கள். அதற்கு
விலை மதிப்பும் அதிகம் .சிலவற்றிற்கு
விலை நிர்ணயம் செய்யவும் இயலாமை.
இறைவன் சிலை செய்ய ஒரு வகை கல்
அந்த சிலையை பிரதிஷ்டை செய்ய கோயில் கட்ட
ஒரு வகையான கல்
இதைத் தவிர தானாகவே உருவாகி
பூஜை பெட்டியில் வந்தமரும் சாளக்ராம கல் வேறு
சாலையிலே தூரத்தை காட்டும்மைல் கற்கள்
கோயிலை சுற்றியும் சந்தி கற்கள்
நிலங்களை பிரித்து காட்டும் நிலை அளவைக் கற்கள்
இப்படியே கற்களை வகைப்படுத்தி போய்க்கொண்டிருக்கிறோம்
நம்மை சுற்றிலும் கற்களை எழுப்பி நம்மை
மண்ணுக்குள் மூடும் வரை.
இக்கணத்திலிருந்தாவது விழித்துக் கொள்ளுவோம்.
உள்ளத்தில் நிறைப்போம்
மண்ணை உண்ட மாயவனை,
கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவனை
காலமெல்லாம் நம்மை காக்கும் கண்ணனை
ஜென்மம் கடைத்தேற
No comments:
Post a Comment