அடுத்த நிலைக்கு முன்னேற.
நாய்க்கிருக்கும் அறிவு!
தெருவில் ஒரு நாய்
சிவனே என்று படுத்துக் கிடக்கிறது.
பாவம்.இரவெல்லாம் அது இருக்கும் தெருவிற்கு
உள்ளே நுழையும் வேறு தெரு நாய்களை
குலைத்துத் ,கத்தி, துரத்தி அடித்து
ஓய்ந்து போய் நடுத் தெருவில்
இரண்டு கால்களை நீட்டிக் கொண்டு
தன் தலையை அதன் மேல் வைத்துக் கொண்டு
கண் மூட தொடங்கிய நேரம்.
பொழுது விடிந்துவிட்டது.
இருந்தும் தன் அருகே நடந்து போவோரை
மெதுவாக கண்ணைத் திறந்து யார் என்று
பார்த்துவிட்டு கண்களை மூடி மூடி
திறந்து கொண்டிருந்தது.
பால் பைகள் போடுபவன், செய்தித்தாள் போடுபவன்
காலை நடை பயில்பவர்கள் இவர்களை தான் மோப்ப சக்தியால்
அடையாளம் கண்டு கொண்டு சும்மா இருக்கும் ,
இந்நிலையில் வேறு தெருவில் இருக்கும் ஒருவன்
அதன் அருகில் வந்தவுடன் அடையாளம் கண்டுகொண்டு
கத்த நினைத்தது. ஆனால் அதனால் முடியவில்லை.
வந்தவன் சும்மா இருக்காமல் அதன் மீது ஒரு கல்லை
விட்டெறிந்தான் .உடனே அந்த நாய் தான் மீது
விழுந்த கல்லைத்தானே
தாக்கியிருக்கவேண்டும் .
ஆனால் அது தன்னை தாக்கியவனைத்தான் துரத்தி கடிக்க
ஓடியது.
ஆனால் மனிதர்கள் ஆறறிவிருந்தும் அவ்வாறு செய்வதில்லை.
நடக்கும்போது காலில் கல் தடுக்கி விழுந்தால்
கல் மீதுதான் குற்றம் சொல்லி புலம்புகிறார்கள்.
தான் மீது எய்யப்பட்ட அம்பைக் குறை சொல்லுகிறார்கள்.
எய்தவனை கண்டு கொள்வதில்லை.
கொலை செய்தவன் மாட்டிக் கொள்கிறான் .
அவனை கொலை செய்ய ஏவி விட்டவன் அகப்படுவதும் இல்லை
தண்டனைக்கு ஆளாவதும் இல்லை.
அதுபோல் எல்லா செயல்களுக்கும் காரணம் நம் மனம்தான்.
அதில் உள்ள எண்ணங்கள்தான் காரணம்.
இந்த உலகம் செயல்களை மட்டுமே பார்க்கிறது.
ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது.
உள்ளத்தில் தோன்றிய எண்ணம்
அப்படியே அழியாமல் இருக்கிறது.
இப்படி கோடி க்கணக்கான எண்ணங்கள்
நம் மனதில் இருந்துகொண்டு நம்மை ஆட்டிப் படைக்கின்றன.
அவைகளை வெளியேற்றவும் வழி தெரியவில்லை.
அவைகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
கனவு, உறக்கம், விழிப்பு என்ற மூன்று நிலைகளிலும் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டு நம் நிம்மதியை குலைத்துக்கொண்டிருக்கின்றன,
அடிப்படையை ஆராய்வோம்.
தீய எண்ணங்களை அழிக்க நினைப்பதை விட்டுவிட்டு
நல்ல எண்ணங்களால் மனதை நிறைப்போம்.
காலப்போக்கில் தீய எண்ணங்கள் வெளியேறிவிடும்
மனமும் சுத்தமாகிவிடும்.

No comments:
Post a Comment