Thursday, July 21, 2016

உறங்கி மாளவா பிறவி எடுத்தோம் ?

 உறங்கி  மாளவா பிறவி எடுத்தோம் ?

ஆம் .நாம் அனைவரும் உறக்கத்தில்தான்
எப்போதும் இருக்கிறோம்.
 இப்போதும் இருக்கிறோம்.

என்னப்பா புதுக் குழப்பம்
என்று நினைக்கலாம்

ஆனால் உண்மை அதுதான் .

நான் விழித்திருந்தால்தானே வலையில்
 பதிவை எழுத முடியும், நீங்கள் படிக்க முடியும்
என்ற கேள்வி எழலாம்.

ஆனால் உண்மையில் எல்லாம்
நம் மனதிற்குள் நடக்கும்
நாடகம் .

எல்லாம் உறக்கத்திற்குள்தான்
அனைத்தும் நிகழ்கின்றன
என்பது யாருக்கும் புரிவதில்லை.

மனம் உறங்கும்போது
ஒன்றும் தெரிவதில்லை.

உறக்கத்தில் கனவுகள் வரும்போது
இவ்வுலக நினைவோ, உடல், மற்றும்
 புலன்களின் நினைவோ இல்லை.

உறக்கத்திலிருந்து விழிக்கும்போது கனவுகளை பற்றிய

நினைவுகள் இல்லை

உறக்கத்தினிடையே ஏற்படும் விழிப்பும்
கனவு நிலையை சார்ந்ததுதான்
என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

அதனால்தான் பாரதி  வாழ்க்கை
என்பதோர் பெருங்கனவு, அதில் கலகம்
செய்யும் மானிடப் பூச்சிகள் என்றான்.

ஆதி சங்கரர் இவ்வுலகம்
ஒரு மாயை  என்கிறார்

உண்மையில் விழித்திருப்பது என்பது
நாம் சுய நினைவுடன் உறக்கம், கனவு  ,
உறக்கத்தினிடையே ஏற்படும் விழிப்பு நிலை,
இந்த மூன்று நிலைகளையும்
சாட்சியாக இருந்து பார்ப்பதுதான்.

அதுதான் உண்மையான விழிப்பு.

அந்நிலையை அடைந்தவர்கள் பல மஹான்கள்
அதில் ரமண மகரிஷியும் ஒருவர்.

நாமும் அந்நிலையை அடைய வேண்டாமோ ?

நம்முள்ளே அனைத்திற்கும் சாட்சியாக இருக்கும்
அந்த சாட்சி போல் நாமும் இந்த உலக வாழ்க்கையை அணுக  கற்றுக்கொண்டால் மட்டுமே
அந்த உயர்ந்த நிலை சாத்தியம்


No comments:

Post a Comment