Wednesday, August 24, 2016

அதான் எனக்கு தெரியுமே!

அதான் எனக்கு தெரியுமே!



அதான் எனக்கு தெரியுமே!

உடலை விட்டு உயிர் போன பின் 
உயிர் மீண்டும் உன் உடலில் புகாது 

அதான் எனக்கு தெரியுமே!

மரத்தில் இருந்து உதிர்ந்த இலை
மீண்டும் மரத்தில் இணைய முடியாது

அதான் எனக்கு தெரியுமே!

மனம் ஒருமைப்படாவிடில் இறைவனின்
மலரடியை நினைக்க முடியாது

அதான் எனக்கு தெரியுமே!
பேயாய்  நாள் முழுவதும் அலைந்து திரிந்து
நாய் போல் ஊளையிட்டு கோடி கோடியாய்
சேர்த்த பொருளில் ஒரு துரும்பு கூட
உன்னோடு வராது

அதான் எனக்கு தெரியுமே!

ஆராய்ந்தறியாமல் ஆத்திரப்பட்டு அனைவரிடமும்
அன்பில்லாமல்அ கந்தையுடன் நடந்துகொண்டால்
இழந்த நல்வாழ்வு மீண்டும் வராது

அதான் எனக்கு தெரியுமே!

உன் உடலில் வெளியே சென்ற மூச்சுக்  காற்று
மீண்டும் உள்ளே வராவிடில் பேச்சே இல்லாது
நீ வெறும் சடலம் ஆகிவிடுவாய்

அதான் எனக்கு தெரியுமே!

உடலில் உயிர்  இருக்கும்  வரைதான் எல்லாம்
மனதில் நினைவு இருக்கும் வரைதான் எல்லாம்
அதற்குள் நம்மை படைத்து  காக்கும் கண்ணனை
நினைக்காவிடில் எடுத்த பிறவி வீணாகி
மண்ணுக்குள் போய்விடுவாய்

அதான் எனக்கு தெரியுமே!

தெரிந்தும் ஏன்  ஒவ்வொருகணத்தையும்
கண்ணனை நினைந்து கடைத்தேற எண்ணாமல்
காலத்தை வீணாக்கி கொண்டிருக்கிறாய்?

அதுதான் எனக்கு தெரியவில்லை 

1 comment:

  1. அருமை அருமை
    சொல்லிச் சென்றவிதம்
    திரு நெல்வேலி இருட்டுக்கடை அல்வா போல்
    படிக்கப்படிக்க சரளமாய் மனத்துள் இறங்கியது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete