Sunday, August 7, 2016

பக்தனும் பரமனும்

பக்தனும் பரமனும் 

பக்தனுக்கும் பிரமனுக்கும்
என்ன உறவு?
அது பக்தி என்னும் உணர்வால்
உருவாகும் உணர்வு
அந்த உணர்வு வந்துவிட்டால்
அவனும்  ஆண்டாள்   போல் தன்னையே  மறந்து
அவன் நினைவாகவே ஆகி அவனுடன்
கலந்து விடுவான்
அவனுள் கலந்த பின் அவன் வேறு
இவன் வேறு  என்ற பேதம் இல்லை.

ஆனாலும் பெருங்கருணை கொண்ட அந்த
இறைவன் அவனுக்கு தன்னைப் போன்றதொரு
தெய்வ வடிவம் அளித்து தன்  பக்கத்தில்
நிற்க வைத்து பெருமைப்படுத்துகிறான்

Image result for srivilliputhur



அவனுக்கும் எனக்கும் பேதம் இல்லை
அவனையும் வணங்கி மகிழுங்கள்
அவனும் என்னைப்  போல் உங்கள்
விருப்பங்கள் அனைத்தையும்  நிறைவேற்றுவான்
என்று உறுதியளிக்கிறான்.

ஆனால் நாம் செய்யும் பக்தி
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை போல்தான் உள்ளது
சோதனைகள் வரும்போது பகவானையே மறந்துவிடுகிறோம்
வேதனைகள் வரும்போது நம்மை படைத்த
பகவானையே வெறுத்து ஒதுக்குகிறோம்

பாகவதத்தை நமக்கெல்லாம் அளித்த
சுக மகரிஷி என்னும் கிளி எப்போதும் பகவானின்
புகழையே பாடிக்கொண்டிருக்கிறது

அதனால் மதுரை மீனாட்சியம்மையும்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாரும்
அந்த கிளியை அவர்கள் தோளிலிருந்து இறங்க
அனுமதிப்பதில்லை.

நாமும் நமக்கு பரம சுகத்தை தரும்
பாகவத கிளியின் நாயகன் கண்ணனை
நம் மனத்திலேயே நிறுத்திக் கொள்வோம்
மீண்டும் மீண்டும் பிறவிக்கடலில்
விழுந்து அல்லல்படாமல் நம்மை காத்துக் கொள்வோம்.

No comments:

Post a Comment