Thursday, July 6, 2017

இசையும் நானும் (201) திரைப்படம் -(குடியிருந்த கோயில் ) பாடல்:குங்கும பொட்டின் மங்கலம்





இசையும் நானும் (201) திரைப்படம் -(குடியிருந்த கோயில் ) 

பாடல்:குங்கும பொட்டின் மங்கலம் 







பாடல் வரிகள் :  ரோஷனாரா  பேகம்

Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male : 
குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 

Female : குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 
Male : எந்தன் பக்கம் வந்தென்ன வெட்கம் 
உந்தன் கண்ணில் ஏன் இந்த அச்சம் 
Male : தித்திக்கும் இதழ் மீது மோகம்
தந்ததே மான் தளிர் தேகம்  (2)
தேகம் (3)
Female : மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம் 
தினம் சந்திக்க சந்திக்க இன்பம் 
Female : பெண்ணான பின்பு என்னை தேடி 
கொண்டதே எண்ணங்கள் கோடி (2) கோடி(3)

Male : குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் 
Male & Female : நெஞ்சம் இரண்டில் சங்கமம் 
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 
Male : தங்கம் மங்கும் நிறமான மங்கை 
அங்கம் எங்கும் ஆனந்த கங்கை 
Male : ஜில் எனும் குளிர் காற்று  வீசும் 
மௌனமேதான் அங்கு பேசும் (2) பேசும்(3)

Female : மண்ணில் சொர்கம் கண்டிந்த  உள்ளம் 
விண்ணில் சுற்றும் மீன் என்று துள்ளும் 

Female : கற்பனை கடல் ஆன போது 
சென்றதே பூந்தென்றல் தூது (2)தூது(3)
Male & Female : 
குங்கும பொட்டின் மங்கலம் 
நெஞ்சம் இரண்டில் சங்கமம் (2)
இன்றென கூடும் 
இளமை ஒன்றென பாடும் 





7 comments:

  1. Replies
    1. ரசிக்க தெரிந்தவனும் நன்றாக புசிக்க தெரிந்தவனும்தான் வாழ்க்கையை வாழ தெரிந்தவன்

      Delete
  2. அருமை நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இந்தப் பாடல் ஒரு இஸ்லாமிய பெண்
    கவிஞர் எழுதியது.அவர் இந்த ஒருபாடல்தான்
    சினிமாவுக்கென எழுதி இருக்கிறார்
    என ஒரு தகவல் நினைவில் இருக்கிறது
    எதுகை மற்றும் இயைபுத் தொடையின்
    சிறப்பே இப்பாடலின் வெற்றிக்குக் காரணம்
    என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இந்த பாடலாசிரியரின் பெயர் ரோஷனாரா பேகம். இந்த படத்தில் மற்ற பாடல்களை எழுதியவர் வாலி அவர்கள். இந்த தகவலை வலையில் தேடி பிடித்து காணொளியில் பாடலினிடையே குறிப்பிட்டிருக்கிறேன். அன்னாரின் புகைப்படமோ அல்லது மற்ற தகவல்களோ கிடைக்கப்பெறவில்லை .தங்களின் குறிப்பிற்க்கு நன்றி.

      Delete
    2. இருந்தும் இவன் பாடலை இசைத்தது குறித்து ஒரு கருத்து கூறியிருந்தால் ஒரு அல்ப சந்தோஷம் இந்த ஆத்மா அடைந்திருக்கும்

      Delete
  4. மிகவும் ரசிக்கும் பாடல்...

    ReplyDelete