Sunday, January 7, 2018

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)

Sunday, January 5, 2014( மீண்டும் வருகிறாள் கோதை)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(24)



பாடல்-24

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி 
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி 
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி 
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி 
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி 
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி 
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் 
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.  



விளக்கம் 


இந்த பாசுரத்தில் உறக்கத்தை விட்டொழித்து அனைத்தையும் மறந்து அரங்கனின்  நினைவாக அவன் கோயிலின் வாசலில் நின்று அவன் தரிசனம் காண நிற்கும் அடியவர்களைக் காண வருகின்றான் கண்ணன் 
அவன் நடை அழகை விவரிக்கும் பாடல் இதோ. 

மூவுலகங்களையும் மூவடியால்
 அளந்த உன் திருப்பாதங்களுக்கு வணக்கம்



மூவுலகம் என்பது
 நம் மனதின் மூன்று நிலைகள் 

புறவுலகத்தில் புலன்களின் 
துணை கொண்டு பகவானின் 
அழகிய வடிவைத் தரிசிக்கிறோம்.
 அவன் திருவடிகளை வணங்குகிறோம். 
மனம் அவன் திருவடிகளில் 
லயிப்பதோ ஒருகண நேரந்தான் 

அதற்கும் ஆயிரம் தடங்கல்கள்>
ஆயிரமாயிரம் திசை மாற்றும் எண்ணங்கள் 
எத்தனையோ வேலைகள்>எத்தனையோ கடமைகள் 
எத்தனையோ துன்பங்கள் 
என அவனை தொடர்ந்து நினைக்கவோ 
தரிசனம் செய்யவோ முடியாது.

அடுத்து உறக்கத்திலே கனவு நிலை. 
அதிலும் அவன் நினைவு நமக்கு வராது.

அதற்கு அடுத்த நிலையிலோ ஆழ்ந்த உறக்கம் 
கேட்கவே வேண்டாம் .ஒன்றும் தெரியாது. 

அதற்கு அடுத்த நிலை .
அது நமக்கு தெரியாது 
அந்த நிலையை அடைய 
 சாதாரண மனிதர்களாகிய 
நாம் எந்த முயற்சியும் செய்வது கிடையாது. 

அது யோகிகளுக்கும் 
ஞானிகளுக்கும் தான் கைகூடும்.
அந்த நிலையில் அவனை எந்நேரமும் தரிசித்து இன்புற்றுக்கொண்டிருக்கலாம். 

அதற்க்கு கடும் முயற்சி
>பயிற்சி வேண்டும்.
 ரேடியோ மிர்ச்சி கேட்டுக்கொண்டிருக்கும்
 நம் போன்றோர்க்கு அது என்றும் கைகூடாது.

எனவே தெரியாத ஊருக்கு போகும்போது 
அங்கு ஏற்கெனவே சென்று 
வந்தவர்களின் உதவியை நாடினால்
 நாம் சுகமாக அங்கு போகலாம்.



 நாம் நம் அகந்தையினால் கிடந்துஅதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல்  உழலுவதைக் கண்ட ஆண்டாள் அவளே வலிய  வந்து நம்மை உறக்கத்திலிருந்து எழுப்பி கைபிடித்து  பகவானிடம் அழைத்து செல்கிறாள். என்னே அவள் கருணை!





பலகலைகளைக் கற்றவனும்>பரமசிவனின் அருளைப் பெற்றவனும்> பெரும் பராக்கிரமசாலியுமாயிருந்த ராவணனை காம க்ரோதாதிகளை அடக்க இயலாமையினால் தறி கேட்டு அலைந்த காரணத்தினால் சம்ஹாரம் செய்த இராம பிரானின் திருவடிகளை பற்ற சொல்கிறாள் கோதை 
எதற்காக?



ஒன்றும் அறியாது எல்லாம் அறிந்தவ்ர்கள் போல் வேடமிட்டு திரியும் நம் போன்ற அஞ்ஞானிகள்  கடைதேறுவதர்க்காக 

கம்சன்>மற்றும் அவனைத் சார்ந்த இரக்கமற்ற அரக்க குணம் கொண்டவர்களை கூண்டோடு அழித்த கண்ணனின் திருவடிகளைப் பற்ற சொல்கிறாள் 



ஒன்றும் அறியா ஆயர் குல மக்களையும் பசுக்கூட்டத்தையும் தேவர்களின் தலைவன் இந்திரனால் கண்ணனின் மகிமையை உணராது பெய்வித்த மழையின் வெள்ளத்திலிருந்து கோவர்தனமலையை விரலால் தூக்கி நின்று காத்த கோவர்த்தனனின் திருவடிகளை அடைக்கலமாக கொள்ள சொல்கிறாள். ஆண்டாள் 

முருகனின் கையில் வேலாய் இருக்கின்றன் கண்ணன் நம் மனதின் உள்ளே இருந்துகொண்டு நம்மை ஆட்டிவைக்கும் காம க்ரோதாதி ஆறு  பகைவர்களை அழிக்க  

 

இப்படியெல்லாம் நாம் வேண்டினால்
 கண்ணன் என்னும் தெய்வம் நம்மை காக்காமல் போய்விடுமா?
நிச்சயம் நம்மை காக்காது போகாது

எண்ணற்ற அருளாளர்களின் வாழ்வே சாட்சி 
இதிஹாச புராணங்கள் சாட்சி. 


நம் பாரத தேசம் முழுவதும் அடியவர்களுக்கு அருள் செய்து அங்கேயே தங்கிவிட்ட தெய்வ வடிவங்களின் அர்ச்சா மூர்த்திகளே சாட்சி.  .


1 comment: