நீ யார்?
நீ யார்?
யார் மனிதனா?
யார் சொன்னது அப்படி?
அது உண்மையல்ல. நீ உன்னை அப்படிநினைத்துகொண்டு
இவ்வுலகிலெல்லாவிதமான அட்டூழியங்களை செய்து கொண்டு வருகிறாய்.
அப்படியென்றால் நீ யார்?
நீ ஒரு மனித பிராணி. அவ்வளவுதான்.
அதனால்தான் உன்னை அரக்கர்களும், காபாலிகர்களும் மற்ற பிராணிகளை போல உன்னையும் தங்களுடைய உணவாக கருதி உண்டார்கள்.
வேதமே கூறுகிறது நீ ஒரு"நர ஐந்து" என்று.
மேலை நாட்டு மேதைகளும் கூறுகிறார்கள். "மனிதன் ஒரு சமூக பிராணி" என்று.
அவர்கள் சொல்லிவிட்டால் அதுதான் நமக்கு "வேத வாக்கு"
இறைவன் படைப்பில் உள்ள கோடிக்கணக்கான வகையான உயிரினங்களில் "நர ஐந்து" என்ற நம்மைப் போன்ற மனித உயிர்களும் ஒன்று. அவ்வளவுதான்.
மற்ற உயிரினங்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் கிடையாது
தான் யார் என்று அறியும் ஆற்றலும் கிடையாது.
பிறவி எடுத்ததிலிருந்து உணவு உண்பது, இனப்பெருக்கம் செய்வது.,முடிவில் மாண்டு போவது இதைத்தான் அவைகள் செய்துகொண்டிருக்கின்றன.
இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு குறிப்பிட்ட கடமைகளை வகுத்து கொடுத்திருக்கின்றன.
அதை அவைகள் என்றும் மீறுவதில்லை.
ஆனால் மனித பிராணியாக உயிரெடுத்த நாம் ,இறைவன் நமக்களித்த
வரத்தை மறந்து தரம் தாழ்ந்து ,கொடிய மிருகங்களை விட கீழ்த்தரமாக அனைத்து உயிரினங்களையும் தன்னை போன்ற மனித பிராணிகளையும் கொடுமைப்படுத்தி
கொன்று குவித்து கொண்டிருக்கிறோம்.
அதனால் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது.
மற்ற உயிரினங்களுக்கு நோய் வந்தால் மருத்துவர்களிடம் செல்வது கிடையாது.
அவைகளுக்கு மரண பயம் கிடையாது.
அவைகள் சொத்து சேர்ப்பது கிடையாது.
அவைகளிடம்பொறாமை கிடையாது.
போட்டி கிடையாது. வஞ்சகம் கிடையாது.
சூது ,வாது கிடையாது.
ஆனால் மனித பிராணிகளாகிய நாம் மட்டும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத பராரி போல் எப்போதும் சோகத்திலே வாழ்கிறோம்.
சுகம் இருந்தாலும் அதை அனுபவிக்க, மனம் இருப்பதில்லை, அல்லது உடல் நலம் இருப்பதில்லை.
எப்போதும் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் வாழ்கிறோம்.
எந்நேரமும் கொழுந்து விட்டெரியும் ஆசைகள்.
பொறாமையால்பொங்கி வேகும் மனம்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்றான் "பாரதி"
எத்தனை வகையான செல்வம் இருந்தாலும் "திருப்தி" என்ற
போதுமென்ற மனம் நமக்கு வராத வரை.
என்றும் நிம்மதியில்லை.

No comments:
Post a Comment