அண்ணாமலையின் பக்தர்களும் ஆண்டாளின் பக்தர்களும் !
அண்ணாமலையின் பக்தர்களும்
ஆண்டாளின் பக்தர்களும் !
சில வாரங்களுக்கு முன்பு
ஒரு செய்தி வந்தது.
அண்ணாமலை கோயிலை
வெடி வைத்து தகர்ப்போம் என்று ஒருவர்
கோயில் நிர்வாகத்திற்கு தொலைபேசி வாயிலாக
மிரட்டல் விடுத்தார் என்று ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.
ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆனால் அண்ணாமலை கோயிலுக்கு பவுர்ணமிதோறும்
கிரிவலம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் ஒருவர் கூட
இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று
பல லட்சக்கணக்கில் கூட்டம் கூடி
அண்ணாமலைக்கு அரோகரா என்று கூவி போய்விட்ட
ஒரு காக்கையும் அன்றே ஒரு கண்டனத்தை கூட பதிவு செய்ய வில்லை.
காரணம் அவர்கள் அங்கு செல்வது அண்ணாமலையாரிடம்
சுயநலம் தொடர்பான வேண்டுதலை செய்ய மட்டும்தான் என்பது
தெள்ள தெளிவாகிவிட்டது.
அண்ணாமலையார் எப்படி போனால் என்ன
என்ற மனோபாவம் போலும். !
வலிமையையும் செல்வ செழிப்பும் மிக்க அண்ணாமலையாரின் பக்தர்கள்மவுனமாக இருந்துவிட்டனர்
ஆனால் வயதான ,உடல் வலிமையற்ற,வன்முறையில் நம்பிக்கையில்லாத ஆண்டாளின் பக்தர்கள் அவர்கள்
தெய்வமாக போற்றும் ஆண்டாள் நாச்சியாரை பற்றி அவதூறு பேசப்பட்டதை தொடர்ந்து இன்று வீதியில் இறங்கி எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்வது. வியக்க வைக்கிறது.
இதுதான் உண்மையான பத்தியின் வெளிப்பாடு.
அவரவர்கள் அவரவர்களின் கலாச்சாரத்தை அனுசரிக்க அரசியல் சட்டம் அனுமதித்திருக்கிறது.
ஆனால் சிலர் வேண்டுமென்றே மற்றவர்களின் வாழ்க்கை நெறிகளில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வதும் எள்ளி நகையாடுவதும் தொடர்ந்து கொண்டு வருகிறது.
இந்த போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
இதற்காக யாரும் வன்முறையில் ஈடுபடுவது.தேவையற்றது
அந்த சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றாகச் சொன்னீர்கள்..
ReplyDeleteதெய்வம் நின்று கேட்கும்.. நிச்சயம் கேட்கும்1..
Mohan Muthusamy
ReplyDelete7:52 AM (8 hours ago)
to me
சரியான முறையில்அணுக வேண்டும் என்ற தங்களது கருத்து நூற்றுக்கு நூறுஉண்மை. இனிய பொங்கல் பண்டிகை நல்வாழ்த்துக்கள். மோகன் ஊரப்பாக்கம.
ReplyDeleteVs Krishnan
11:40 AM (5 hours ago)
to me
Dear Sri Pattabi,
You are very correct.
Krishnan