Saturday, January 12, 2019

இதற்காகவா பிறந்தோம்?

இதற்காகவா பிறந்தோம்?

 இதற்காகவா பிறந்தோம்?

வாழ்க்கை வாழ்வதற்க்கே.

நாம் இந்த உலகிற்கு வந்து விதிக்கப்பட்ட
காலம் வரை இருந்துவிட்டு சென்றுவிடுவோம்

நாம் எங்கிருந்து வந்தோம் ,
மீண்டும் எங்கு செல்வோம் என்றும் தெரியாது.

இங்கு இருக்கும் காலத்தில் உறக்கத்தில்
ஒவ்வொரு நாளும் பெரும்பகுதி கழிந்துவிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட வயது வரை
பிறர் தயவில் நாம் வாழ்கிறோம்.

நாம் சுயமாக சிந்திக்கும் வரை பிறர் சொல்வதை
கேட்டுக்கொண்டு காலத்தை கழிக்கிறோம்.

சில காலம் சென்ற பிறகு பிறருக்காக
நம்மை பந்தம்,  பாசம், அன்பு, சேவை,கடமை,  என்ற போர்வையில்
நம்மை அழித்துக்கொள்ளுகிறோம்.

அதனால், ஆசை, கோபம், பொறாமை, பயம், ஏமாற்றம், மன  அழுத்தம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகி துன்பங்களை சந்திக்கிறோம்.

ஒரு கால கட்டத்தில் நம்மால் ஒருவருக்கும் பயனில்லை என்ற நிலையில் இந்த உலகத்தினரால் ஒதுக்கப்பட்டு மன  வேதனையுடன். இந்த உலகை விட்டு நீக்கப்படுகிறோம்.

ஒரு கால கட்டத்திலும் நாம் நம்மைப் பற்றி சிந்திப்பதில்லை. 

இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை தெரிந்துகொள்வதில். அக்கறை காட்டுவதில்லை.

இப்படியேதான் ஒவ்வொரு பிறவியையும்
வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த உலகத்தை சீர் செய்ய, தீய மனிதர்களை திருத்த தெய்வங்களே மனித வடிவில் வந்து தோற்றுப்  போய்  ஓடிவிட்டன.

இந்த உலகம் மீண்டும் மீண்டும் திருந்த  முடியாத அளவிற்கு சீர்கெட்டு போய்விட்டது.

அப்படி யாராவது முயற்சி செய்தால் அவர்களை குழப்பி மீண்டும் படுகுழியில் தள்ளுவதற்கு இந்த உலகத்தில் ஒரு பெரும் கூட்டமே நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டு தயாராக இருக்கிறது. அவைகளை எதிர்த்து போராட தெய்வத்தின் துணை அவசியம். அப்படி போராடுபவர்களை துன்புறுத்தி கொல்லுவதற்கு இந்த உலகம் தயங்காது என்பது சரித்திரம் காட்டும் உண்மை. 

அந்த வளையத்தை  உடைப்பது மிகவும் கடினம். ஆனால் முயற்சி செய்தால் விடுதலை உண்டு.

ஆகையால் உங்களுக்காக வாழுங்கள். கிடைத்த வாழ்க்கையை இன்பமாக வாழுங்கள்.இல்லாதவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால்  உங்களை அழித்துக்கொண்டு பிறருக்கு உதவுவதால் உங்களுக்கு
ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. உலகம் உங்களை கொண்டாடப்போவதில்லை.

பிச்சைக்கார உலகம் இந்த வீட்டில் பிச்சை கிடைக்காவிடில் வேறு வீட்டில் பிச்சையெடுத்து பிழைத்துக்கொள்ளும்.

அவர்களுக்காக நீங்கள் இழந்த வாழ்க்கை எந்த நிலையிலும் உங்களுக்கு மீண்டும் திரும்ப கிடைக்கப் போவதில்லை

No comments:

Post a Comment