Saturday, December 10, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே!
ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

இன்பமாக இருப்பதுதான் நம் ஆன்மாவின் இயல்பு
ஆனால் நடப்பது என்ன?

இறைவன் நாம் அனைவரும் இவ்வுலகத்தில் இருக்கும் வரை
சுகமாக,மகிழ்ச்சியாக வாழவே அனைத்து வசதிகளையும்
இலவசமாகவே வழங்கியுள்ளான்

ஆனால் இன்று உலகில் பெரும்பாலானோர் இறைவன்
அனைவருக்கும் வழங்கிய வசதிகளை தங்களுக்கு
மட்டும்தான் என கருதி சுயநல எண்ணத்துடன் பிறருக்கு
சேரவேண்டிய தனைத்தையும் தங்கள் ஆதிக்கத்தை
செலுத்தி அபகரித்துகொண்டுவிட்டனர்

அதனால் கோடிகணக்கான மக்கள்
அடிப்படை வசதிகள்,சுகங்கள் உரிமைகளின்றி துன்பபட்டுகொண்டிருக்கின்றனர்
.
தன சுகம்,சுயனலதிர்க்காக பிறரை துன்புறுத்தும்
குணம் கொண்டவர்கள் அரக்கர்கள்

ஆனால் எந்த காரணமும் இல்லாமல்
 பிறரை துன்புறுத்தி கொடுமை செய்து
கொலை செய்பவர்கள் ராஷதர்கள்

இவர்களை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால்
 மக்களிடையே ஒற்றுமை வேண்டும்

ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறம்,ஏழை,பணக்காரன்,
என பல பிரிவுகளாக பிரிந்து,அறியாமைக்கும்,
மூட நம்பிக்கைகளில்,மது போதை,சிந்திக்கும்  திறமையின்மை ,அவநம்பிக்கை போன்ற தீய  குணங்களால் ஆட்பட்டு
மதி மயங்கி உள்ளவர்களால் என்ன செய்ய முடியும்?

உலகெங்கும் அவர்களின் போராட்டங்கள் நசுக்கபடுகின்றன.ஒடுக்கபடுகின்றன

இந்நிலையில் அனைவருக்கும் தங்களை
 காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி
இறைவனின் பாதங்களை முழுமையாக சரணடைவதுதான்
.
பாற்கடலில்,பள்ளி கொண்ட அரங்கன்,குரங்கனோடு சேர்ந்துகொண்டு
ராம பிரானாக அவதரித்து அரக்கர்களை அழித்து நல்ல நிர்வாகத்தை மக்கள்
வாழ அளித்தான்

அவன் பதங்களை சரணடைந்தால்
 நம் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும்.
ராமன் பரப்ரம்ம ஸ்வரூபம்.
அனைத்து கடவுள்களும் அவனின்
வெவேறு வடிவங்களே என்பதை உணர வேண்டும்.


பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்
பல வழிகளில் கடவுளை தேடுகிறார்கள்
பலர் தாம் வாழும் இந்த உலகில்  தேடுகிறார்கள்.
சிலர் புத்தகங்களில் ,சிலர் தம் உள்ளத்தில்,
சிலர் மனிதர்களிடத்தில் என தேடல் பலவாறாக உள்ளது.
ஆனால் வெற்றியடைவது கோடியில் ஒருவரே.
அப்படிப்பட்ட சிலர் அந்த இன்பத்தில் மூழ்கி
அமைதியாக இருந்து விடுகின்றனர்.
ஒரு சிலர் அந்த அனுபவத்தை
மற்றவருக்கு சொல்ல முற்படுகின்றனர்.
ஆனால் உலக மாயையில் மூழ்கியிருக்கும் மக்கள்
அவர்கள் கூறுவதை செவி மடுப்பது கிடையாது.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற
ஏதாவது மார்க்கம் கோரி அவர்களை
துன்புறுத்துவதால் அவர்கள் வெறுப்படைந்து
மக்கள் முன் தோன்றாமல் தங்களை
மறைத்துக்கொண்டு வாழுகின்றனர்.
உலக வாழ்வோடு ஒட்டாமல்
உலக கடமைகளை பற்றில்லாமல் செய்து 
இறைவனை தேடுவது பகவத் கீதையில்
பகவான் காட்டிய சுலபமான வழி.
பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும்
மூல காரணம் .
ஒரு பொருள்,ஒரு மனிதர் மீது
பற்று வைக்கும்போதுதான்
,விருப்பு வெறுப்புகள்,ஏமாற்றங்கள்,
துன்பங்கள் ஏற்படுகின்றன
அதனால்தான் பாவ புண்ணியங்கள்
விளைகின்றன
அவைகள் சேர சேர பிறவிகளின்
எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது
இதை உணர்ந்து கொண்டு
ஆன்மாவை தேடும்  பயணத்தில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 

Friday, December 9, 2011

சுத்தம்தான் தான் கடவுள்

கடவுள் பற்றிய இலக்கியங்களின் உண்மை பொருளுணராது 
அவைகளை பழித்தும்,திரித்தும் ,இழிவு படுத்தியும் 
மக்களின் மனதில் கடவுளை பற்றிய காலம் காலமாக 
இருந்த நம்பிக்கைகளை அகற்ற கடும் முயற்சிகளை 
செய்தனர் நாத்திகவாதிகள் .
ஆனால் இன்று ஆன்மிகம் கரை புரண்டோடுகிறது
லட்சகணக்கான மக்கள் விரதம் இருக்கின்றனர்,
ஆலயங்களுக்கு செல்கின்றனர்.
வழிபாடுகள் செய்கின்றனர்.
நாத்திகம் பேசும் பகுதறிவாதிகளின் குடும்பத்தினரே அவர்களின் 
பேச்சை கேட்காமல் ஆன்மீகத்தை நாடுகின்றனர்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது ஆதிக்கம் 
செலுத்துவதும்,பிறரை இழிவுபடுத்துவதும் 
ஆன்மீகவாதிகளை விட இந்த பகுத்தறிவு பேசும்
கூட்டத்தினரிடையே அதிகம் என்பதை சாமானிய
மக்கள் நன்கு  அறிவர்
இன்று அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் 
அவர்களிடம் பிழைப்புக்காக நாத்திக வேஷம் 
போடுகின்றனரே  தவிர 
உண்மையில் அல்ல. 
கடந்த காலங்களில் கடவுள் மீது பய உணர்வு இருந்ததால்தான்
நதிகள்,நீர் நிலைகள்,ஆலயங்கள் ,பொது  இடங்கள் சுத்தமாக 
இருந்தன
.நாத்திகம் பேசிய நயவஞ்சகர்களால் இன்று 
தெய்வமாக போற்றி வணங்கப்பட்ட நதிகளில்,
இறைச்சி கழிவுகள்,சாய கழிவுகள்,மனித மிருக கழிவுகள் ,
ரசாயன கழிவுகள் அனைத்தையும் விட்டு நாசமாக்கிவிட்டனர்
.
தங்கள் நதிகளிளிருந்துதான் குடி நீரை பெற்று வாழ்கிறோம் என்பதை 
சிந்தித்து பார்ப்பதேயில்லை .
ஏரிக்கரைகள்,குளக்கரைகள் நதிகரைகள்.கடற்கரைகள் 
,காலியாக உள்ள இடங்கள் கட்டிடங்கள்,
சுற்றுலாதலங்கள்,ஆலய சுற்றுபுரங்கள் 
 என ஒரு இடம்கூட மிச்சம் வைப்பதே இல்லை 
எல்லாவற்றிலும், சிறுநீர்கழித்தும் ,மலம் கழித்தும்,
குப்பைகளை கொட்டியும் அசுத்தம் செய்வதையே
தங்கள் இயல்பாக கொண்டுவிட்டனர்.
அரசுகள் கழிப்பிடங்கள் கட்டி தந்தாலும்
முறையாக  பயன்படுத்துவதில்லை.
மேலும் அரசும் அவைகளை தொடர்ந்து பராமரிப்பதில்லை. 
சுத்தம்தான் தான் கடவுள் 
அதை புறக்கணித்துவிட்டு மற்ற புற வழிபாடுகள் 
அனைத்தும் அனுசரிப்பது நம்மை நாமே 
ஏமாற்றி கொள்ளும் செயலாகும் 
இயற்கையை அசிங்கபடுத்தும் இந்த மூடர்களுக்கு
இறைவன் அருள் கிடைக்கும் என்பது கானல் நீரே .

Thursday, December 8, 2011

நிலையற்ற உடலின் துணை கொண்டு நிலையான இறைஇன்பத்தை அடையத்தான் இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது

நமக்கு முடிவு நெருங்கிவிட்டது என 
உணர்த்த தலை முடி நரைக்கும்
ஆனால் அதை உணராது இன்று மக்கள்
நரை மயிருக்கு சாயம் பூசி 
முதுமைகோலத்தை மறைக்க 
பார்க்கிறார்கள் 
hair will die at any moment 
அழியபோகும் அந்த மயிருக்கு 
hair dye பூசுவதிலேயே பெரும் பணத்தை 
செலவழிக்கிறார்கள் 
இருந்தாலும் சில நாட்களுக்கு பிறகு சாயம் வெளுத்துவிடுகிறது 
ஒரு கால கட்டத்தில் ஒரு சாயமும் பயன்படுவதில்லை 
இன்னும் சிலர் தலை முழுவதும் வழுக்கை ஆகிய பின்னும்
விக் வைத்துகொண்டு திரிகின்றனர்
பணம் படைத்தவர்கள் மண்டையில் மயிர் முளைக்க 
பலவிதமான சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர்
மயிரை அறுவை சிகிச்சை மூலம் தலையில் நடும்
படலமும் அரங்கேறிகொண்டிருக்கிறது 
இப்படியாக உடலின் பழுதடைந்த ஒவ்வொரு 
பகுதியையும் சீர்படுத்த காலத்தையும் பணத்தையும் 
வாழ்நாள் முழுவதையும் வீணடிக்கின்றனர்
இவர்களை என்னவென்று சொல்வது?
பிறர் தம்மை மெச்ச வேண்டும் என்று இவர்கள்
இவ்வாறு செய்கின்றனர்
நிலையற்ற  உடலின் துணை கொண்டு நிலையான 
இறைஇன்பத்தை  அடையத்தான் 
இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது
என்று இவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசினால்
நம்மை பயித்தியக்காரர்கள் என்றும் ,
இவ்வுலக வாழ்க்கை எல்லா சுகங்களையும் 
அனுபவிப்பதற்கே என்றும் திமிராக பேசுகின்றனர்
ஆனால் வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களோ,
தீர்க்க முடியாத நோய்களோ,இழப்புகளோ 
ஏற்பட்ட பின்புதான் இவர்களுக்கு கடவுளை 
பற்றிய நினைப்பே வரும்
ஆனால் அப்போதும்கூட திருந்தாதவர் 
பலர் உண்டு. இவ்வுலகில் 


உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?




கிடைத்தற்க்கரிய இந்த மனித பிறவி கிடைத்தும்
இந்த மனித குலம் பிறவியின் நோக்கத்தை மறந்து
வாழ்நாள் முழுவதும் கிடைத்ததைஎல்லாம்
வயிற்றுக்குள் தள்ளுவதுதான் தன கடமையாக
நினைத்துக்கொண்டு மடமையுடன்
செயல்பட்டுகொண்டிருப்பது
வேதனைக்குரிய விஷயம்

ஒருநாள் பிணமாக போகும் மனிதன் பிற உயிர்களை கொன்று
அவைகளை விதவிதமாக சமைத்து தன உடலை கொழுக்க வைக்கின்றான்.
கொழுத்த உடல் பருத்து நோய்களின் இருப்பிடமாகி மடிந்து போய்
பருந்துகளுக்கும்,நரிகளுக்கும்,நாய்களுக்கும்,நெருப்புக்கும்  இரையாகி
போவதை தினம் தினம் கண்ணுற்றும் அவன் மனதில் எந்த சலனமும் ஏற்படுவதில்லை

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் .
உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே
என்றார் திருமூலர்

உயிர் அழியாமலிருக்க உடலை வளர்க்கத்தானே சொன்னார்
காண்பதனைத்தையும் தின்று கொழுக்க அல்லவே

உடலை வளர்த்தால் மட்டும் போதாது
உயிரையும் வளர்க்க வேண்டும் என்று சொன்னதை
மனிதர்கள் ஏன் மறந்தனர்?

உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?

இந்த ஊனுடலில் உத்தமன் கோயில் கொண்டுள்ளான்
என்பதை அறிந்து தெளிந்ததை நமக்கெல்லாம்
புரியும்படி  விளக்கியுள்ளார்

அந்த உயிரின் துணை கொண்டு இந்த உடலில் உறைந்து நம்மையும்
இந்த உலகனைத்தையும் இயக்குகின்ற ஒலி மற்றும்  ஒளி வடிவான
இறைவனை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
புற இருள் நீங்க உலகில் தீபம் ஏற்றி வழிபடுதலும்
அக ஒளியான இறைவனை காண சத்தியத்தையும்
கடைபிடிக்க சொன்னார்கள் ஆன்றோர்

கார்த்திகை தீப திருநாளில் இந்த சிந்தனையை மனதில் நிறுத்தி
கிடைத்தற்கரிய இப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குவோம்

வயிற்றை மட்டும் நிரப்பும் பணியை மட்டும் எந்நேரமும் செய்யாமல்
மணிவயிறு வாய்த்த கோசலை மகனான ராம நாமத்தை
உச்சரித்து உய்வடைவோமாக 


Sunday, December 4, 2011

என்று மறையும் இந்த விரோத போக்கு?


என்று மறையும்  இந்த விரோத போக்கு?
முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் மீது பகைமை கொண்டு 
அவர்களை பழி தீர்ப்பதும் அதற்க்கு பதிலாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மீது பழி தீர்ப்பதும்
பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த மோதல் போக்கில் அழிவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்களும் அந்த நாட்டு வளங்களும்
 போரினால் பெரிதும் பாதிக்கபடுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமே 

இரு மதத்தினரும் இந்து மதத்தை இழிவுபடுத்துவதையும் மக்களின்
அறியாமையையும் ஏழ்மையையும்,ஒரு சிலரின் சுயநலத்தையும் 
பயன்படுத்தி மதம் மாற்றம் செய்வதையும் சமீப காலமாக 
அதிகரித்து வருவதும் அதனால் இந்திய நாட்டில் பல இடங்களில் 
சமூக  அமைதி குறைந்து வருவதையும் நாம் பார்க்கின்றோம் 

மதத்தின் பெயரால் இன்று மக்களிடையே ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையும் ,அவர்களின் மனதில் மிருக உணர்ச்சியை தூண்டிவரும் 
ஒரு சில விஷமிகள் ஒற்றுமையாய் வாழும் மக்கள் ஒருவொருக்கொருவர் 
அடித்துக்கொண்டு அழிவதற்கு வழி வகுப்பதும்  தினசரி நிகழ்வாகிவிட்டது 

கடவுள் நம்பிக்கையில்லா சீன அரசும் அஹிம்சையை போதிக்கும் புத்த மதத்தை சார்ந்த திபெத்தை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை கொடுமைபடுத்தியதால்  லட்சகணக்கில் அகதிகளாக வேறு நாடுகளில் அந்நாட்டு மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் 

இன்று அநேகமாக உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வெவ்வேறு இனங்களை சேர்ந்த தலைவர்கள் மற்ற இனங்களை கொன்று துன்புறுத்தி அழித்து இன்பம் காண்பது தொடர்கதையாகிவிட்டது 

விலங்குகளை போல் அறிவில்லாமல் ,ஒருவொருகொருவர் அன்பு 
பாராட்டாமல் சுயநலத்துடன் பிறரை கொடுமைபடுத்தி,பிறரை வஞ்சித்து 
வாழ்க்கை நடத்தவா இந்த உலகை இறைவன் படைத்தான்?

நாம் கேட்காமலேயே கோடிகணக்கான இன்பங்களை இறைவன் அள்ளி அள்ளி தந்தது மானிடம் முழுவதும் அன்போடு ஒருவொருகொருவர் உதவி செய்துகொண்டு மகிழ்வோடு வாழவே 

ஆனால் இங்கு நடப்பதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது
மனதில் இரக்கமுள்ளவன் உறங்கமுடியவில்லை 
உருக்கமுள்ளவன் இறைவன் திருவடிகளிடம் இந்நிலை மாற பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை 

அன்பர்களே அனைவரும் இந்நிலை மாற தினமும் காலையில் எழும்போது 
தீய சக்திகளின் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி பகைமையற்ற  பொழுதாக தினம் விடிய வேண்டும் என்று ஒரு கணம் இறைவனிடம் இந்த உலகிற்காக மன்றாடுங்கள்

அதில்தான் அனைவரும் நலமும் அடங்கியுள்ளது. 

பாசம் என்பது சுயநலம் கொண்டது அன்பு சுயநலமற்றது

பாசம்தான் நம்மை பந்தத்தில் சிக்க வைக்கிறது 
பாசம்தான் நம்மை பாவம் செய்ய தூண்டுகிறது
பாசம்தான் நம் கண்களை மறைக்கிறது 
அப்படியானால் பாசம் இல்லாவிடில் இந்த உலகம் இயங்க முடியுமா?
ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் இல்லாவிடில் அது ஆரோக்கியமான 
மனநிலையில் வளரமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது
பாசம் தேவைதான்
ஆனால் அளவுக்கு மீறிய பாசம் பாசம் காட்டுபவரையும்
பாசத்திற்குஆளானவரையும் ஒரு சேர அழித்துவிடும் 
மகாபாரதத்தில் திருதராஷ்ட்ரன் தன் மகன் துரியோதன் மீது வைத்த 
அளவுகடந்த பாசத்தால் அவன் செய்த தீய செயல்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்ததால் அவன் தீயவனாகி தீய  செயல்களை செய்து 
அவனும் அவன் வம்சமும் அழிய காரணமாகிவிட்டான்
ராமாயணத்தில் கைகேயி தன் மகன் பரதனிடம் வைத்த 
பாசத்தால் தன் கணவனை இழந்தாள்,தன் மகனின் அன்பையும் இழந்தாள்
இப்படியாக ஒவ்வொரு குடும்பத்திலும்  இதுபோன்ற சம்பவங்கள்  
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன
ஆனால் யாரும் தங்களை திருத்திகொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது 
எல்லோரிடம் அன்பு காட்ட வேண்டும் 
பாசம் என்பது சுயநலம் கொண்டது 
அன்பு சுயநலமற்றது
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும்