Wednesday, August 8, 2012

பக்தி என்று நினைத்து கொண்டிருக்கும்?

பக்தி என்று நினைத்து கொண்டிருக்கும்?

பக்தி என்றால் என்ன?
பிறரை ஏமாற்ற பட்டை போடுவது,மறைவில் பட்டை அடிப்பது பக்தி அல்ல

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ஆண்டில் சில நாட்கள் பாடுவது 

அது முடிந்ததும் ஆண்டு முழுவதும் கள்ளும் உயிர்களை வதைத்து முள்ளால் குத்தி கறி சோறு தின்பதும் பக்தி அல்ல
தன்னை காப்பாற்ற வேண்டி கோவிந்தா கோவிந்தா என்று கோயிலில் கூவிவிட்டு வெளியில் வந்ததும் தன்னை  நம்பியவர்களை நட்டாற்றில் விட்டு வேடிக்கை பார்ப்பது பக்தியல்ல

தன் ஒரு கன்னத்தில்  அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்று வசனம் படித்துவிட்டு கன்னத்தில் அறைந்த நாட்டின் மீதே படையெடுத்து அப்பாவி அந் நாட்டு மக்களையே அழித்தொழிப்பது பக்திஅல்ல
ஒரே இறைவன்,அனைவரும் சகோதர்கள் என்று அனு தினமும் போதித்து கொண்டு தன் சகோதர மக்களையே ஆயிரக்கணக்கில் கொன்று குவிப்பது பக்தியல்ல 

அன்பே சிவம் அன்பே சிவம் என்று ஒவ்வொரு கணமும் உச்சரித்துக்கொண்டு வாயில்லா அப்பாவி பிராணிகளை கொன்று தின்று வயிறு வளர்ப்பது   பக்தியல்ல

அகிம்சையே உயர்ந்த தர்மம் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு உதவுவதுபோல் கடன் கொடுத்து அநியாய வட்டி வாங்கி பிழைப்பு நடத்துவதும் பக்தி ஆகா
தான் வாழ இவ்வுலகில் உரிமை இருப்பதுபோல் அனைத்து உயிர்களும் வாழ உரிமை இருப்பதை உணர்ந்துகொண்டு எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமல் அன்பு கொண்டு வாழ்வதே உண்மையான பக்தி
அந்நிலையில்தான் உலகில் அமைதி நிலவும். 

நாம் நாமாக இருக்கிறோமா ?

நாம் நாமாக இருக்கிறோமா ?

இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

நாம் சுயமாக எண்ணி செயல் புரிகிறோமா ?

இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

ஏன் இவ்வாறு இருக்கிறோம் ?

இந்த கேள்வியை நாம் எப்போதும் நமக்குள் கேட்பதேஇல்லை

ஏனென்றால் நம் உள்ளம் சொல்வதை நாம் கேட்க தயாரில்லை

பிறரிடம் ஆலோசனை கேட்டே நாம் வாழ பழக்க பட்டிருக்கிறோம்

நாம் சந்தித்த மனிதர்கள் நம்மை வளர்த்தவர்களின் குண நலன்கள் பள்ளியில் நமக்குகற்பித்த ஆசிரியர்கள் நாம் படித்த புத்தகங்கள் என நம்முள்வாங்கிக்கொண்ட செய்திகளே நம்மை வழி நடத்தி செல்கின்றன
பழக்கபடுத்தப்பட்ட மிருகங்களை போல நாம் மற்றவர்களின் சுயநலத்திற்கு அடிமையாகி பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையைநாசமாக்கி கொள்கின்றனர்

அவைகள் நம் மனதை விட்டு என்றும் அகலுவதில்லை

நாமும் நம் அடுத்த தலைமுறையினை அதைபோல்தான் வளர்த்துக்கொண்டு வருகிறோம்

மனிதர்கள் என்று கூறி கொள்வதற்கு அருகதையற்ற பல செயல்களை செய்து வருகிறோம்

நல்ல கல்வி கற்றிரிருந்தும் பண்பில்லாமல் நடந்துகொள்வது இன்றைய நாகரீகமாகிவிட்டது

நம்மை பற்றி அறிந்துகொள்வதை விட பிறரை பற்றியும் அவர்களின் அந்தரங்கங்களை பற்றியும் தேவையற்ற செய்திகளை தெரிந்துகொள்வதிலும்அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதிலும்தான் நம் வாழ்நாளில் பெரும்பகுதி போய்க்கொண்டிருக்கிறது

ஒரு கூட்டம் அரசியல்வாதிகளின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது
ஒரு கூட்டம் சினிமா நடிகர்கள் பின்னால் மற்றும் சாமியார்களின் பின்னாலும் போய்க்கொண்டிருக்கிறது
ஒரு கூட்டம்  மதுக்கடைகளின் வாசலில் தங்கள் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கின்றது

உழைக்காமல் கொழுத்து கிடக்கும் கூட்டம் ஒருபுறம்
உழைத்து உழைத்து சாலையோரம் ஒடுங்கி கிடக்கும் கூட்டம் ஒருபுறம்
எதுவும் செய்யாமல் பிறரை சுரண்டியே பிழைப்பை நடத்தும் கூட்டம் ஒரு புறம்
இங்கு யாருக்கும் சுதந்திரம் கிடையாது
சட்டத்தினை மதித்து நடபவர்களுக்கு தண்டனை
சட்டத்தை மிதிப்பவர்களுக்கு பாதுகாப்பு
நம் நாட்டின் நிலைமை இதுதான் 

Tuesday, August 7, 2012

மனதை அடக்க முடியுமா ?

மனதை அடக்க முடியுமா ?

மனதை அடக்க முடியாது

ஏன்?

அது ஒருமாபெரும் சக்தி 
அதை அடக்க நினைத்தால் 
அது நம்மை ஏமாற்றி விடும் 

பிறகு எப்படி அதை அடக்குவது ?

மனதை அடக்க நினைக்க கூடாது 
அதை முதலில் நம் கட்டுபாட்டிற்குள்  
கொண்டு வரவேண்டும் 
பிறகு அதை நாம் வழி நடத்த வேண்டும் 

மனம் என்றால் என்ன ?

மனம் என்றால் நம் கடந்த கால நினைவுகளின் பதிவுகள் 
அவைகள் இருக்கும் வரையிலும் அந்த எண்ணங்கள் நம்மை பாதித்து கொண்டிருக்கும். நம்மை அடிமைபடுத்தி கொண்டிருக்கும் 
அதை நாம் முழுவதுமாக மறக்க வேண்டும் 

அதை எப்படி செய்வது?

எண்ணங்கள் தோன்றும்போது இது ஏற்கெனவே முடிந்து போன சம்பவங்களின் பதிவுகள் இதனால் நமக்கு ஒன்றும் பயனில்லை என்று அவற்றை எண்ணம்தோன்றும்போதே ஒதுக்கி தள்ள வேண்டும்
பிறகு புதிதாக எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துகொள்ளவேண்டும்  

அதை எப்படி செய்வது ?

நிகழ்காலத்தில்மட்டும் நாம் வாழ பழக வேண்டும் 
பிறகு அதையும் மறந்துவிட வேண்டும் ஒவ்வொரு நொடியையும் உள்ளது உள்ளவாறு ஏற்றுகொள்ள பழகவேண்டும் .எந்த செயலைசெய்தாலும் அதை முழு மனதோடு சரியாகசெய்துமுடிக்கவேண்டும் அந்த செயலை கடந்த கால சம்பவங்களுடன்  எதிர்கால கற்பனைகளோடும் ஒப்பிட்டு குழப்புவதைநிறுத்த வேண்டும் 

நம்மையெல்லாம் விரட்டுவது எது?

நம்மையெல்லாம் விரட்டுவது எது?

முதலில் ஆசைகள் .பிறகு பேராசைகள்

நாம் ஒன்றும் செய்யாமல் வெறுமனே இருக்கவேண்டும் என்றாலும்
நம்மால் சும்மா இருக்க விடாமல் செய்வது எது ?

மனக்கட்டுப்பாடு இல்லாமை 

நமக்கு சம்பந்தமில்லாத செயல்களில் நம்மை ஈடுபடுத்துவது எது ?

நமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை 

நாம் தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிட்டு சிக்கல்களில் மாட்டிகொள்கிறோம் ?

தன்னை மற்றவர்களிடம் புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்ள

நாம் செய்வது தவறு என்று தெரிந்து கொண்ட பின்பும் மீண்டும் அந்த
தவறை செய்ய காரணம் ?

நாம் தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளாததுதான் தான் 





Thursday, August 2, 2012

செருப்புக்கு செருப்பா?

செருப்புக்கு செருப்பா?

ஆம் நாம் செருப்புக்கு செருப்பு போடுகிறோம்
எப்படி ?
நாம் இருக்கும் உடல் தோலால் மூடப்பட்டுள்ளது
ஆகையால் உடல் தோல் இல்லாமல் இயங்கமுடியுமா?
இல்லை நம் கால்கள் தோலால் மூடப்படாமல் இருந்தால் நடக்கத்தான் முடியுமா?

அப்படி இருந்தும் வீட்டை  விட்டு வெளியே செல்லவேண்டுமென்றால் கூடுதலாக தோல் செருப்புகளை அணிந்து கொள்கிறோம்.
வீட்டிற்குள் நுழையும்போது செருப்புகளை வீட்டின் வெளியே விட்டு விடுகிறோம்

அதைபோல் இறைவனை வணங்க கோயிலுக்குள் செல்லும்போதும் செருப்புகளை வெளியே விட்டுவிட்டு நாம் மனதினை மட்டும் துணையாக கொண்டு இறைவனை வணங்குகிறோம்

அதைபோல்தான் நம்முடைய இதயத்திற்குள் உறையும் இறைவனை நாம் வணங்க வேண்டுமென்றால் உடலின் போல் போர்த்தபட்டுள்ள இந்த தோலினால் ஆன உடலை மறந்துவிட்டு  மனதின் துணை கொண்டு இறைவனை அணுக வேண்டும் அணுகிய பின்பு மனம் உடல் இரண்டையும் மறந்து  இறைவனோடு ஒன்றி போக வேண்டும்

உலக தேவைகளுக்காக நாம் என்றும் இறைவனை
பிரார்த்திக்க வேண்டிய அவசியமில்லை 
ஏனென்றால் நாம் செய்யும்
நன்மை தீமைகளுக்கேற்ப்பதான் 
நமக்கு நன்மைகளும் வாழ்வும்  தானே அமையும்
நம் வாழ்வும் தாழ்வும் நம் கையில்தான் இருக்கிறது  

எனவே இறைவனிடம் வேண்டுதல்கள்  செய்வதை விடுத்து
இறைவனை மட்டும் வேண்டி பிரார்த்தனை செய்வதுதான்
உண்மையான வழிபாடு


   

நம்பிக்கை


நம்பிக்கை 
மனிதனுக்கு நம்பிக்கை தேவை 
அது அவனுக்கு மிக மிக அவசியம்

ஒருவனுக்கு முதலில் தன் மீது நம்பிக்கை இருக்கவேண்டும் 
அது இல்லாத நிலையில் தன்னை படைத்த இறைவன் மீது 
நம்பிக்கை இருக்க வேண்டும்

இரண்டும் இல்லாதவன் உயிர் இருந்தும் இறந்தவனுக்கு ஒப்பானவன்

தன் மீது வைக்கும் நம்பிக்கை ஒரு நிலை வரைதான் உதவும் 
அதை கடந்த நிலையில் இறை மீது வைக்கும் நம்பிக்கைதான் 
நம்மை அனைத்து துன்பங்களிலும் காப்பாற்றும் என்பது 
பக்தர்கள் கண்ட வழி

இறைவனின் உண்மையான அன்புக்கு நாம் பாத்திரமாக 
வேண்டுமென்றால் அவனிடம் மனப்பூர்வமாக நம் உள்ளதையும் 
நம்மிடம் உள்ளதனைதையும் ஒப்படைத்துவிடவேண்டும் 
அதோடு மட்டுமலாமல் நம்முடைய,நமக்கு விதிக்கப்பட்ட 
கடமைகளையும் எந்த குறையும்மில்லாது,
பலனை எதிர்பார்க்காது செய்யவும்  வேண்டும் 

இறைவனிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று
கடமைகளை செய்யாதிருப்பவனை 
இந்த  உலகமும் வெறுக்கும் இறைவனும் 
அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டான் 

இதைதான் மகாத்மா காந்தியடிகள் தன் வாழ்நாளில் 
நடைமுறை படுத்தி காட்டியுள்ளார். 
அவர் பிரார்த்தனையையும்  சேவையையும் 
ஒன்றிணைந்து செயல்படும் வித்தையை
 நமக்கு காட்டியுள்ளார்.
.




எனவே ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டே 





நம் கடமைகளை சுயநலமில்லாது ஆற்றுவோமானால்
நமக்கு நன்மைகள் விளையும் என்பதில் ஐய்யமில்லை  

ராம பக்தர்கள்





படங்களும் தகவல்களும்-ஓம் சக்திமாத இதழ்  மே -1990