Wednesday, November 28, 2012

எல்லாம் அவன் கையில்?


எல்லாம் அவன் கையில்?


பகுதி-2

அது சரி என் தாய் என்னை விட வயதானவள்
அவளை விட்டு விட்டு என்னை மட்டும் 
ஏன் இந்த உலகத்தை விட்டு 
கிளம்பும்படி கேட்கிறீர்கள்?என்று கேட்டேன் ?

அவள் விதி இன்னும் முடியவில்லை.
அதனால் இன்னும் அவள் இருக்கிறாள் .

அதுசரி உன் தங்கை உன்னை விட
 இரண்டு வயது சிறியவள். 
அவள் எப்படி இருக்கிறாள்?

அவள் இரண்டு ஆண்டுகளுக்கு 
முன்பே போய் சேர்ந்து விட்டாள் 
அவள் ஏன் போய் சேர்ந்தாள் ?
அவள் விதி முடிந்துவிட்டது 
அதனால் போய் சேர்ந்தாள்
நீயே சொல்கிறாய் 
அவள் விதி முடிந்துவிட்டது என்று. 

அதே விதிதான் உனக்கும்
என்றார்கள் வந்தவர்கள்.

அதற்க்கு நான் அவள் 
கடமைகளை முடித்துவிட்டாள்

நானோ என் கடமைகளை இன்னும் முடிக்கவில்லை
என் கடமைகளை முடித்துவிட்டு 
நான் வந்துவிடுகிறேன் என்றேன்

என்ன கடமை ?

என் இரண்டு மகன்களுக்கும் திருமணம் முடிக்க வேண்டும். 
எத்தனை ஆண்டுகளாக முயற்சி செய்கிறாய்?
ஆறு ஆண்டுகளாக முயற்சி செய்தும்
ஒன்று நடக்கவில்லை
இதிலிருந்து என்ன தெரிகிறது? 
என் கையில் ஒன்று இல்லை என்று.

பிறகு அதைப்பற்றி உனக்கு ஏன் கவலை.?

அதை இறைவன் பார்த்துக்கொள்வான்,
நீ எங்களுடன் வந்துவிடு என்றார்கள்

இல்லை இல்லை என் மனைவி 
இரண்டு ஆண்டுகளாக உடல்நலமின்றி உள்ளாள்.
அவளை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை 
அவளை நான்தான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். 
அவள் உடல்நலம் சிறிது தேரட்டும் வந்துவிடுகிறேன்.

உன் மனைவிக்கு உடல்நலம் 
கெட்டு விட்டதை உன்னால் தடுக்க முடிந்ததா?
இல்லை

அவளை முழுமையாக குணப்படுத்த முடிந்ததா?
இல்லை 

அவளை முழுமையாக குணப்படுத்த முடியுமா?
முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்

அவள் இரண்டு ஆண்டுகளாக உயிரோடு 
இருப்பதே இறைவன் செயல்

அப்படியிருக்க நீ எதற்க்காக 
அவளைப்பற்றி கவலைப்படுகிறாய் ?

அதுதான் பாசம் என்ற மாய வலை.
அதில் சிக்கி கொண்டால் எத்தனை 
ஆண்டுகளானாலும் அதிலிருந்து வெளி வரமுடியாது

உன்னால் எதுவும் செய்ய முடியாது.
எந்த செயலையும் தடுக்கவும் முடியாது
இந்நிலையில் ஏன் இன்னும் நாட்களை 
கடத்தி கொண்டிருக்கிறாய்.
எங்களுடன் புறப்பட்டு வந்துவிடு

சரி வருகிறேன் நான் இன்னும் ஆன்மீகத்தில் 
சில சாதனைகளை செய்துகொண்டிருக்கிறேன். 
மீண்டும் மனித பிறவி கிடைக்குமோ 
கிடைக்காதோ தெரியாது.
 இறைவனை கண்ட பின் 
உங்களோடு வந்துவிடுகிறேன். 

அதற்க்கு இவ்வளவு பாசம் பந்தம் 
வைத்திருக்கும் இந்த பிறவி உனக்கு உதவாது.
உனக்கு துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு நல்ல இடம் தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டது. 
அங்கிருந்துகொண்டு
 உன் சாதனைகளை தொடரலாம் என்றனர்.
மேலும் அவர்கள் சொன்னார்கள். 

நாங்கள் யாரிடமும் இது 
போன்ற விவாதங்களில் ஈடுபட்டது கிடையாது.,
இறைவன் உத்திர விட்டால் 
அவர்களுக்கு தெரியாமலே 
அவர்களை அழைத்துக்கொண்டு சென்று விடுவோம். 

நீ இறைவனுக்கு வேண்டப்பட்டவன் ஆதலால்
உன்னுடன் இவ்வளவு நேரம் உரையாடினோம். 

நன்றி உங்களுக்கு.
எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டேன். 
இனி அவன் விட்ட வழி என்று இருக்கிறேன்.
இறைவனிடம் மறு உத்திரவு கிடைத்தவுடன் 
என்னை அழைத்து செல்லுங்கள் என்றேன் 

என் மயக்கமும் தீர்ந்தது 
மாயையும் அகன்றது.

4 comments:

  1. மாயையை அகற்றியதும் அவன் செயலன்றோ?

    ReplyDelete
    Replies
    1. மாயையில் சிக்கி தவிக்கும் நம்மை அந்த
      மாயக்கண்ணன்தான் மீட்கவேண்டும்
      அவனே கதி என்றிருந்தால் அது
      நிச்சயம் நடக்கும்.
      வருகைக்கு நன்றி.

      Delete
  2. மாயையை விட பெரிய மாயை வேண்டும்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. இதுதான் மாயை என்பதை புரிந்துகொண்டால்
      அதுவே நம்மை விட்டு அகன்றுவிடும்
      அதை புரிந்துகொள்ள சத்குருவின் அருள் வேண்டும்.
      அவர் அருளின்றி இறைவனே
      நம் எதிரில் வந்து நின்றாலும் ஒன்றும் விளங்காது.

      Delete