விக்கினவர்த்தனன்' இரட்டைப் பிள்ளையார் (Part-3)
திபெத்தில் ஒரு சிலாவடிவம் இருக்கிறது.
விக்னராஜ விக்னேஸ்வரன் என்னும் மூர்த்தம் அது.
மிகவும் விந்தையான விசித்திரமான ஆச்சரியமான வடிவம் அது.
அதுபோலவே ஜ்யேஷ்டா தேவி முதலிய தெய்வங்களின்சிலைகள் இருக்கின்றன.
நம்மில் அனேகர் அவற்றைப் பார்த்திருக்கமாட்டார்கள்.
மாங்கோலியா, திபெத், சைனா, ஜப்பான்
ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகள் இருக்கின்றன.
இதில் ஒரு விந்தை என்னவென்றால்,
விநாயாகரின் மிக மிக அரிதான வடிவங்கள் அங்கு கிடைக்கின்றன
படங்கள் கிடைத்தால் பிறகு போடுகிறேன்
பெண் வடிவில் 'கணேசினி' என்ற வடிவு ஒன்று இருக்கும்.
அது சைனாவில் இருக்கிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்
சங்கத்தார் மண்டபம் என்றொரு இடம் இருக்கிறது.
இது சுவாமி சன்னிதியைச் சுற்றியிருக்கும்
இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது.
முக்குறுணி பிள்ளையார் சன்னிதியிலிருந்து
இடப்பக்கம் திரும்பி பிரகாரத்திலேயே நடந்து சென்றால்
வடமேற்கு மூலையில் அந்த மண்டபம் இருக்கும்.
அதற்கு எதிர்ப்புறத்தில் சில விநோத சிற்பங்கள்
இருக்கும் பெரும்தூண்களைக் கொண்ட மண்டபம் இருக்கும்.
அந்தத் தூண்களின் ஒன்றில் கணேசினியின் சிலையைக் காணலாம்.
மதுரையில் இருக்கும் புண்ணியவான்கள்
யாராவது படங்களை எடுத்து அனுப்பி வைத்தால் பதிவில் போடலாம்.
சில கணேசினியின் சிலைகள் புலிக்கால்களுடன் இருப்பதைக் காணலாம்.
அந்த மாதிரி கணேசினியை 'வியாக்ரபாத கணேசினி என்று குறிப்பிடுவார்கள்.
இரட்டை விநாயகர்' என்ற இன்னொரு அமைப்பும்
ஜப்பானில் காணப்படும்.
இரண்டு விநாயகர்கள் ஒருவரை ஒருவர் கட்டி த் தழுவிக்கொண்டு
நிற்பதைபோன்ற வடிவம் அது.
நன்றி
தகவலும் படமும்
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html
வித்யாலங்கார Dr.S.ஜெயபாரதி
http://www.visvacomplex.com/main.html
விரைவில் படங்களையும் எதிர்ப்பார்க்கிறேன் ஐயா... நன்றி...
ReplyDeleteகிடைத்தவுடன்
Deleteபோடுகிறேன் DD