Tuesday, November 6, 2012

மனிதர்களை நம்புவதை விட


மனிதர்களை நம்புவதை விட

இன்ப துன்பங்களை 
அனுபவித்து தீர்க்கவே
இந்த மனித பிறவி
இதை யாராலும் தவிர்க்க முடியாது

ஒரே மனம்தான் இன்பத்தையும் 
துன்பத்தையும் அனுபவிக்கிறது

ஒரே செயல் ஒருவருக்கு துன்பமாகவும்
மற்றவர்க்கு இன்பமாகவும் தோற்றமளிக்கிறது

உண்மையில் துன்பம் என்றோ 
இன்பம் என்றோ உலகில்
ஏதும் இல்லை

நடுநிலையில் மனதை வைத்து பார்த்தால்
இந்த உண்மை விளங்கும்

இதற்க்கு தெளிவான சிந்தனை வேண்டும்

எந்த பிரச்சினையையும் 
உணர்ச்சி வசப்படும்போது
அணுகினால் தீர்வு பிறக்காது

கடவுளை வணங்கிவிட்டால் மட்டும்
நம் பிரசினைகள் தீர்ந்துவிடுமா?

சிலவற்றை இதயம் கொண்டு அணுகவேண்டும்
சிலவற்றை அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்
சிலவற்றை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

இதில் தடம் மாறுவதால்தான் இன்று உலகில்
அனைத்தும் தீர்க்க முடியாதபிரச்சினைகளாக மாறி
எல்லா நாடுகளும் பலவிதமான சிக்கல்களில்
மாட்டிகொண்டு தவிக்கின்றன

கணத்திற்கு கணம் குணம் மாறும்
மனிதர்களை நம்புவதை விட
குணக்குன்றான கடவுளை நம்பினால்
நிச்சயம் நல்ல தீர்வு அமையும்.

1 comment:

  1. மனதை போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது...

    உண்மை கருத்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete