பத்ராசலம் ராமதாசர்
பத்ராசலத்தில் தனக்கு கோயில்
கோயில் எழுப்பிய கோபண்ணாவை
அரசன் சிறையில் அடைத்து
12 ஆண்டுகள் கொடுமைப்படுத்தியதை
ஏன் தடுத்து காப்பாற்றவில்லை
என்று சிலர் கேட்கிறார்கள்.
ஸ்ரீராமன் தர்மத்தின் வடிவம்.
தாசில்தார் பொறுப்பில் இருந்த
கோபண்ணா அரசு பணத்தை
எடுத்து கோயில் கட்டியது அரசு பணத்தை
கையாடல் செய்தமைக்கு ஒப்பாகும்.
அதனால் அரசன் அவருக்கு கொடுத்த
தண்டனை சரியானதே
அவர் இறைவனுக்கு கோயில்
கட்டவேண்டுமென்று நினைத்தால்,
அவர் தன் கையில் உள்ள பணத்தை
போட்டு கட்டியிருக்கவேண்டும்
அல்லது பொது மக்களிடம்
பணம் வசூல் செய்தோ அல்லது
அரசனின் அனுமதி பெற்று
பணியை செய்திருக்க வேண்டும்.
தண்டனைக்காலம் முடிவடைந்தபின்
அவரை ராமபிரான் ஆட்கொண்டான்.
அருள் செய்தான்,
எனவே இறைப்பணி யானாலும்
சட்டத்திற்கு புறம்பாக செய்யும்
எந்த செயலையும்
இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை
உண்மை தான் ஐயா...
ReplyDeleteநன்றி...
நன்றி DD
Deleteஇறைப்பணி யானாலும்
ReplyDeleteசட்டத்திற்கு புறம்பாக செய்யும்
எந்த செயலையும்
இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை
-உண்மைதான் ஐயா!
தவறு செய்தாலும்
Deleteஇறைவன் நம்மை
காப்பாற்றுவான்
நாம் அவன் மீது நம்பிக்கை
இழக்காமலிருக்குவரையில்
ஆனால் அதற்குரிய தண்டனையை
நாம் அனுபவித்த பிறகுதான்
அதுவும் யாரையும்
நிந்திக்காமல்
முணுமுணுக்காமல்
அதுவும் பொறுமையை
கடைபிடித்தால்
அப்போது அவன் அருள்
தவறாது கிடைக்கும் நிச்சயம்.
மேல கண்ட படமும் அடியேனால்
மெடல் பாயிலில் செய்யப்பட்டது