நலம் தரும் சொல்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சொல்லும் எழுத்தும் இன்றியமையாதது
ஒருவன் சொல்லும் சொல்தான் அவனை
வாழ்வின் உச்சிக்கு கொண்டுசெல்லும்
அதே நேரத்தில் ஒரு தவறாக பொருள் கொண்ட
சொல் அவனை பாதாளத்தில் தள்ளிவிடும்.
ஒரு முறை தவறிவிட்டாலும் போதும்
மீண்டும் மீள்வது கடினம்.
சொல்தான் வாழ்வின் ஒளி எண்ணற்ற சொற்கள் இருந்தாலும்
ஒரு சொல்லுக்கு மட்டும்தான் தீமையை அழித்து நன்மைகளை
அள்ளித் தரும் ஆற்றல் உண்டு.
அது என்ன சொல்?
அந்த நலம் தரும் சொல் எது?
அதனால் என்ன பயன்கள், பலன்கள் விளையும். ?
அந்த ரகசியத்தை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு
சொல்லிவிட்டார் திருமங்கையாழ்வார். ஒரு பாடல் மூலம்.
ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த அந்த சொல்லை அனைவரும்
அறிந்து உய்ய வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார். திருபெரும்புதூர்
ஞான வள்ளல் ஸ்ரீ ராமானுஜர்.
அவருக்கு முன்பே பக்த பிரஹலாதன் அந்த சொல்லின்
மகிமையை தன் வாழ்வில் அனுசரித்து அதன் மகிமையை
உலகிற்கு காட்டிவிட்டான்
சிறுவனாயினும் சிந்தை கலங்காது அந்த சொல்லை
உச்சரித்தால் அந்த சொல்லுக்குறியவனை நேரே கண்டு
இன்புறலாம் என்று அன்றே நமக்கு நிரூபித்துவிட்டான்.
எவ்வளவோ பக்தர்கள் அந்த சொல்லை சொல்லி
மேன்மையடைந்தார்கள்.
அறிவில்லா மனிதரெல்லாம் அரங்கமேன்று அழைப்பாராகில் "
என்றார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
நாமெல்லாம் ஆறறிவு படைத்தவர்கள் ஆயிற்றே. ?
நம்மை படைத்தவனை மறந்து நாமேதான் எல்லாம் என்ற
எண்ணம் உடையவர்கள் அல்லவா !
தீர்க்க இயலா பிறவிப் பிணிக்கு மருந்து கிடைத்தும் அதை
உட்கொள்ளாமல் இருந்தால் வியாதி எப்படி தீரும்?
அந்த நலம் தரும் சொல்லை சொல்லி உய்ய வேண்டாமோ?
அந்த நலம் தரும் சொல் "நாராயணா என்னும் நாமம்தான்"
நம்மை மேல் நிலைக்கு கொண்டு செல்லும்
அந்த பாசுரம் கீழே.
பாடலின் ஒலி அலைகள்;-இணைப்பு
http://gaana.com/song/kulam-tharum-selvam-tandidum-virutham-narayana-divyanaamam

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
நம்மை மேல் நிலைக்கு கொண்டு செல்லும்
அந்த பாசுரம் கீழே.
பாடலின் ஒலி அலைகள்;-இணைப்பு
http://gaana.com/song/kulam-tharum-selvam-tandidum-virutham-narayana-divyanaamam
"நாராயணா என்னும் பாராயணம்... நலம் யாவும் தருகின்ற தேவாமிர்தம்.."
ReplyDeleteஅதுவும் எவ்வளவு குடித்தாலும் நஞ்சாக மாறாத அமிர்தம். அதுதான் நாராயணா என்னும் நாமம்
Deleteஅருமை ஐயா
ReplyDeleteதங்களின் கைவண்ணத்தில் படம் அருமை
நன்றி ஐயா
நன்றி KJ
Deleteஎல்லாம் அவன் செயல். இவனுக்கு என்ன தெரியும்?
ஓம் நமோ நாராயணா எனும் போதே உற்சாகம் பிறப்பதனை எத்தனை பேர் உணர்ந்திருப்பர்! உய்விக்கவந்தவனின் நாமத்தின் சிறப்பு போற்றும் உன்னத பகிர்வு!
ReplyDeleteஉணர்வுடையோர் உற்சாகம் பெறுவார் .
Deleteஉணராதோருக்கு ஒன்றும் இல்லை.
அற்புதமான படம்...
ReplyDeleteஓம் நமோ நாராயணா...
நன்றி DD
Deleteநலம்தரும் நாமம் நாராயணா..
ReplyDeleteநல்ல பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி அம்மணி.
Deleteநாராயணா என்னும் நாமம் நலம்தரும் ,வளம் தரும் இம்மையில்
நல்லதோர் பதம் தரும் மறுமையில் -
பொறுமையில் சிறந்த பூமகளின் அருள் தரும்- பொன்னும் பொருளும் அருளும் அலைமகளின் அன்பும் கிடைக்கும்-மன சாந்தி தரும்