திரு ஆடிப்பூரத்தில் அவதரித்த ஆண்டாள்
திரு ஆடிப்பூரத்தில் அவதரித்தவளே
ஆன்மா கடைத்தேற வழி காட்டும்
திருப்பாவை பாடல்களைத் தந்தவளே
பேதையாய் வந்தாய் பெருமானின்
புகழ் பாடி கோதையாய் ஆனாய்
மாந்தர்களின் வேதை தீர நல்லதோர்
பாதையை அமைத்துத் தந்தாய்
மானிடராய் பிறந்து மாலவனின்
புகழ் பாடி மணம் வீசி மாயவனுடன்
கலந்துவிட்ட மாதரசியே
அறியாமை என்னும் உறக்கத்தில்
உழலும் மாந்தரை தட்டி எழுப்பி
ஓங்கி உலகளந்த உத்தமனின்
புகழை பாட வைத்த அன்னையே
என்றும் நீங்காத நிலைத்த
புகழடைந்தாய் .இந்நாளில் உன்
புகழ் பாடி ஆயர்பாடியில் வந்துதித்த
கண்ணனின் திருவடிகளை வணங்குவோம்.
திரு ஆடிப்பூரத்தில் அவதரித்தவளே
ஆன்மா கடைத்தேற வழி காட்டும்
திருப்பாவை பாடல்களைத் தந்தவளே
பேதையாய் வந்தாய் பெருமானின்
புகழ் பாடி கோதையாய் ஆனாய்
மாந்தர்களின் வேதை தீர நல்லதோர்
பாதையை அமைத்துத் தந்தாய்
மானிடராய் பிறந்து மாலவனின்
புகழ் பாடி மணம் வீசி மாயவனுடன்
கலந்துவிட்ட மாதரசியே
அறியாமை என்னும் உறக்கத்தில்
உழலும் மாந்தரை தட்டி எழுப்பி
ஓங்கி உலகளந்த உத்தமனின்
புகழை பாட வைத்த அன்னையே
என்றும் நீங்காத நிலைத்த
புகழடைந்தாய் .இந்நாளில் உன்
புகழ் பாடி ஆயர்பாடியில் வந்துதித்த
கண்ணனின் திருவடிகளை வணங்குவோம்.
ஆயர்பாடியில் வந்துதித்த கண்ணனின் திருவடிகளுடன், சூடிக் கொடுத்த சுடர்மணியாம் அன்னையவளின் திருவடிகளையும் சேர்ந்து பற்றி வணங்குவோம்!
ReplyDeleteகிருஷ்ணார்ப்பனம்!