Sunday, July 27, 2014

உள்ளத்தில் கள்ளம் புகலாமோ ? உமா காந்தனை மறக்கலாமோ?

உள்ளத்தில் கள்ளம் புகலாமோ ?
உமா காந்தனை மறக்கலாமோ? 

உள்ளமே கோயில்
ஊனுடம்பே ஆலயம்
என்றார் ஒரு சித்தர்



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

கோயிலில் இறைவன்
அல்லவோ இருப்பான்?

அதுவும் அவனை உளமார
நினைப்பவர்களின் உள்ளம் கவர் கள்வன்
அல்லவோ அவன் ?

அவன் சிவபெருமானன்றி
வேறு யாராக இருக்க முடியும்?

ஆனால் நம் உள்ளத்தில் யார் யாரோ
பெயர் தெரியாத பேய்களுக்கெல்லாம்
இடம் கொடுத்திருக்கிறோமே
அது எப்படி சரியாகும்?

பேய்களை கணங்களாக சிவபெருமான்
வைத்திருக்கலாம். ஆனால் அது
அவனுக்கு சாத்தியப்படும்.ஆனால் நமக்கு?

பேய்களை அவன் ஆட்டி வைப்பான்.
ஆனால் அது நம்மால் அது முடியுமோ?
நிச்சயம் முடியாது.

அவைகள் அல்லவோ நம்மை ஆட்டிப்
படைத்து நம்மைப் படைத்தவனையே
மறக்கச் செய்து மாறா துன்பத்தில்
நம்மை ஆழ்த்தி விடுகின்றனவே?

ஜீவன் சவமாவதற்குள்  சிவா சிவா
என்று அவன் நாமம் பாடுவோம்.

இல்லையேல் குவா குவா என்று
அடுத்த பிறவிக்கு தயாராவதை தவிர
வேறு ஏது  கதி?

ஆனால் அது மனித பிறவி கிடைத்தால்
மட்டுமே கூடும். ஆனால் நமக்கு மரப்பொந்தில் வாழும்
பறவையோ அல்லது பூச்சியோ அல்லது
குகையில் வாழும் விலங்கோ கிடைத்தால்
அதற்கும் வழியில்லை.

நேரம் போனால் வராது .அதுபோல் அரிதாய்
கிடைத்த இப்பிறவி போனாலும் மீண்டும்
கிடைக்காது. இக்கணமே ஹரி நாமம் 
சொல்லுவோம். அவன் நாமத்தால் நம்
உள்ளத்தை  நிரப்புவோம்.



நாம் எதெல்லாம் நம்முடையது
என்று எண்ணும்  அனைத்தும் நம்மை
விட்டு விலகி செல்வதற்கு முன்.


2 comments:

  1. சிவா சிவா - குவா குவா : சொன்ன விதத்தை ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ரசித்தால் மட்டும் போதாது உள்ளத்தில் இறை நாமத்தின் ருசி அறிய பசி
      உண்டாகவேண்டும்.

      Delete