படித்தது போதும் .பாதையை தேர்ந்தெடுப்பீர் !
உலக வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள்
எதையாவது புதிது புதிதாக
படித்துக்கொண்டிருப்பார்கள்.
எல்லாம் மற்றவர்களுடைய
வாழ்க்கையில் நடைபெற்ற அனுபவங்கள்.
மற்றும் அவர்களுடைய கற்பனைகள்.
அவ்வளவுதான்
இதனால் தனக்கு என்ன பயன்
என்று யாரும் சிந்திப்பது கிடையாது.
எதுவாக இருந்தாலும் அது
அவர்களுடைய உள்ளத்தில்
புகுந்து வேலை செய்யுமா
என்பதும் கேள்விக்குறி.
படித்தவற்றை பற்றி அவர்கள் எழுதுவதும்,
மற்றவர்களோடு விவாதிப்பதிலும்
அவர்கள் வாழ்வு ஓடிவிடும். அவர்களும்
இந்த உலகை விட்டு ஓடிவிடுவார்கள்.
அதே போக்குதான் ஆன்மீக வாழ்க்கையிலும் இன்று
நடந்துகொண்டிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான் நூல்கள்.
அதற்கு வானம் போல் அகண்ட விரிவுரைகள்.
ஒவ்வொன்றும் ஒரு வழியைக் காட்டுகின்றன.
ஒவ்வொருவர் அவரவர் புரிந்துகொண்ட வகையில்
அவரவர் கருத்துக்களை மக்கள் மீது திணிக்கிறார்கள்.
பலர் அவர்கள் சொல்வதுதான் சரி என்கிறார்கள்.
மற்றவைகள் கவைக்குதவாது என்று கூறுகிறார்கள்.
ஒன்றும் படிக்காதவன்
நம்பிக்கையோடு இருக்கிறான்.
படித்தவன் குழப்பத்தில் கிடக்கிறான்.
அவனால் எதையும் முழுவதுமாக கொள்ளவும் முடியவில்லை.
ஒதுக்கி தள்ளவும் முடியவில்லை. முறையாக அனுசரிக்கவும் முடியவில்லை.அவன் வாழ்க்கை போலியாக இருக்கிறது.
காட்டில் படிப்பறியா வேடன் ஒரே நாளில் அனைத்தையும் மறந்து, ஊண் உறக்கத்தை விடுத்து லக்ஷ்மி நரசிம்ம பெருமானை தேடி பிடித்துக்
காட்டுக்கொடியில் கட்டி கொண்டு வந்து அங்கு தவம் செய்யும் முனிவரிடம் கொண்டு நிறுத்தினான். எப்படி? அதுதான் நம்பிக்கை.
மதுராவில் உபன்யாசகர் திருடனிருந்து தப்பிக்க ஏராளமான நகைகள் பூண்ட கண்ணனை பற்றி அவனிடம் வர்ணிக்க அவன் அதை உண்மை என நம்பி அவரிடம் கண்ணனை பிடித்துக் கொண்டு நிறுத்தினான்? எப்படி ?அதுதான் நம்பிக்கை.
நம்முடைய பூஜைகள் எல்லாம் பலன்களை
எதிர்பார்த்து செய்யப்படுவது மட்டுமே
ஆனால் ஒரு பக்தனின் இலக்கு
இறைவனை அடைவது ஒன்று மட்டும்தான்.
அதனால்தான் அவர்கள் இறைவனை அடைந்தார்கள்.
அதற்கு எளிதான செலவில்லாத ,நம்பிக்கையான் வழி ராம நாமத்தை சொல்வதுதான் அல்லும் பகலும். சொல்லுவோம் மாயையை வெல்லுவோம்.

No comments:
Post a Comment