Friday, January 1, 2016

உன்னை காக்கும் கடவுள் என்று !

உன்னை காக்கும் கடவுள் 
என்று !



அபயம் என்ற கரியை
காத்திட்ட ஹரியே
உன்னை காக்கும் கடவுள்
என்று உலகோர் போற்றி
புகழ்வது சரியே

தவம் செய்து வரம் பெற்று
அகந்தை கொண்டு
தகாத வழியில் நடந்த
அசுரர்களை  அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
அயோத்தியில் அரசன்
ராமனாய் அவதரித்தாய்

அடுத்த யுகத்தில் தர்மம் தவறி
தறி கெட்டலைந்த 
அரசர்களை அழித்தொழிக்க
ஆயர்பாடியில் ஆடு மேய்க்கும்
சிறுவனாய் உருவெடுத்து வந்து
அடியவர்களை காத்து நின்றாய்

ஊரும் பேரும்  அற்ற உன்னை
உள்ளத்தில் நினைந்து உருகி வழிபட
ஆயிரம் நாமங்களை பீஷ்மர் வாயிலாக
பாடக் கேட்டு எமக்களித்தாய் (அபயம்)

காலம்தோறும் உந்தன் பெருமை
பேச கணக்கில்லா உந்தன் அடியார்கள்
தோன்றி தோன்றி உந்தம் பெருமையை
பாடி பாடி பரப்பி மகிழ்கின்றாரன்ரோ !

மாநிலத்து உயிர்கள் யாவும்
நீங்காத  இன்பம் பெற்று வாழ
நில  மடந்தை கோதை யன்னை
நின் புகழ் பாடும்
திருப்பாவை தந்தனளே

உன்னை காக்கும் கடவுள்
என்று உலகோர் போற்றி
புகழ்வது சரியே

1 comment:

  1. அரங்கனின் புகழ் பாடுவதுதான்
    பக்தருக்கெல்லாம் பெருமை

    அதை விடுத்தது அற்ப குணம் கொண்டவர்களை
    பாடி பரிசில் பெற நினைப்பது மடமை

    அதனால் நாம் என்றும்
    அடைவோம் சிறுமை

    ReplyDelete