Monday, January 25, 2016

ஏது நமக்கு நேரம் ?


 ஏது  நமக்கு நேரம் ?






ஆயிரமாயிரம் வடிவங்கள்
ஆயிரம் நாமங்களால் துதிக்கப் பெறும்
ஆயிரம் தலை ஆதி சேஷன் மேல்
பள்ளி கொண்டுள்ள ஆராவமுதனுக்கு
ஒன்றை ஒன்று மிஞ்சும்  அழகோ அழகு
கண்டு மகிழ  நமக்குதான்  இல்லை பொழுது

அதுவும் இருப்பதோ இரு கண்கள்
அவை இரண்டும் ஒன்று சேர
நோக்கினாலும் மனம் ஒன்றாவிடில்
யாது பயன்?

அது இல்லை இது இல்லை என்று
அழுது புலம்பத்தான் அவனியில்
அனைவருக்கும் நேரம் கழிகிறது
காலம் முழுதும்

ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றும்
அதிகாலை முதல் ஆழ் துயில் கொள்ளும் வரை



அழியும் பொருள் மீது ஆசை கொண்டு
தேடுவதும் பின் அதை பாதுகாப்பதும்
அகன்றால் துயரத்தில் ஆழ்வதும்
அனைவரின் வாழ்க்கையில் வாடிக்கையாகிவிட்ட
நிலையில் நிலைத்த பதம் அருளும்
அரங்கனின் திருவடிகளை நினைத்து
வணங்க ஏது  நமக்கு நேரம் ?

1 comment:

  1. Aranganin thiruvadigali eppavum ninaipavrku oru kuraium kidayzthu. Very Attracting and bakthiful article Sir. M. Mohan

    ReplyDelete