Monday, January 25, 2016

மனம் படுத்தும் பாடு

மனம் படுத்தும் பாடு 

மனம் என்று ஒன்று  இருக்கிறது

அது எங்கே இருக்கிறது ?

இந்த உடலில் இருக்கிறது

பலரும் மனது இருக்குமிடத்தை கேட்டால்

தங்கள் மார்பை கையால் தொட்டுக் காட்டுகிறார்கள்.

ஆனால் மனம் என்பது என்ன ?

அது எப்படி இருக்கும் என்று உருவகப்படுத்த முடியுமா?

அது என்ன பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது.

அது எவ்வாறு செயல்படுகிறது ?

அது தானாக செயல்படுகிறதா?

அல்லது வேறு ஒரு வெளி சக்தியின் தூண்டுதலால்

செயல்படுகிறதா?

மனதின் நிலையை ஒவ்வொருவரும் 

ஒவ்வொருவிதமாக வெளிப்படுத்துகிறார்கள் 

ஒருவன் தனக்கு மனசே சரியில்லை என்கிறான்

மற்றவனோ என் மனதில் அமைதியே சிறிதும் இல்லை  என்கிறான்

ஒரு சிலரோ என் மனதில் பயம் கப்பிக்கொண்டு என்னை

பாடாய் படுத்துகிறது என்கிறார்கள்

ஒரு சிலரோ என் மனதில் எதைக் கண்டாலும் யாரைக் கண்டாலும்
வெறுப்பாக இருக்கிறது என்கிறார்கள்

இன்னும் சிலர் என் உயர்வைக் கண்டு மகிழ்வடையாமல்

பொறாமை தீயால் வெந்து தவிக்கிறது.

என் மனம் எதிலும் நாட்டமில்லாமல் கிடக்கிறது என்கிறார்கள் பலர்.

என் மனம் எதிலும் நிலையில்லாமல் சென்றுகொண்டிருப்பதால்

வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வீணாகிக் கொண்டிருக்கிறது.

இப்படியாக மனதை பற்றி நினைத்தால் அதன் செயல்பாடுகளைப் பற்றி

விவரங்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் மனதைப் பற்றி ஆராய முற்படுவோம். (தொடரும்)


2 comments:

  1. Dear Sri Pattabi Raman,

    Your research on mind is very inspiring. According to Ramana Maharshi, the mind is nothing but thoughts. Namadu Ennangale Thaan Manasu. Remain quiet (Summa Iru) and you will find there is no mind. The great spiritual Sadhana is to attain a state of mindlessness, as in deep sleep.

    Krishnan.

    ReplyDelete
    Replies
    1. Dear VSK

      I have just started about subject "MANA"
      It will go for some time.

      After some time we can think about "MOUNA"
      its control,and its dissolution.

      Great saints have devised thousands of ways to suit all types of people
      through religious doctrines

      Some people follow them with their limited knowledge and come to some conclusions and create problems to themselves
      and to the society at large

      we can discuss everything in the course of time.

      TR Pattabiraman

      Delete