Saturday, August 30, 2014

சீ !போடா நாயே !

சீ !போடா நாயே !

சீ !போடா நாயே !
என்ற வார்த்தைகளை சொல்பவனுக்கும்
அதைக் கேட்பவனுக்கும் BP உடனே எகிறும்.

ஏன் அப்படி நாய்மேல் அவ்வளவு வெறுப்பு?

சொல்பவனுக்கும் தெரியாது.கேட்பவனுக்கும் தெரியாது
மொத்தத்தில் அந்த சொல் மற்றவர்களை இழிவுபடுத்த
பயன்படும் சொல்லாக நினைக்கிறார்கள்.

வெறுப்பின், சினத்தின் உச்சகட்டம் அது.

சொல்பவனுக்கு தன்  எதிரியை மட்டம் தட்டி விட்டதாக
ஒரு இறுமாப்பு

எதிரிக்கோ தான் மிகவும் அவமானப்பட்டுவிட்டதாக
நினைத்து சொன்னவனை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று
மனதில் சபதம் செய்துகொள்கிறான்.

உண்மையில் நாய்போல் மனம் அங்கும் இங்குமாக காரணமின்றி அலைவதால் மனதை நாயுடன் ஒப்பிடுகிறார்கள்.

ஒரு எண்ணத்தை பிடித்துக்கொண்டால்  அது நிறைவேறும்வரை அதை விட மறுப்பதால் அதை பேயுடனும் ஒப்பிடுகிறார்கள் .பேயாய் உழலும் சிறுமனமே என்று பாரதியார் பாடுகிறார்.

தியாகராஜ சுவாமிகளும் பல கீர்த்தனைகளில் மனதிற்கு உபதேசம் செய்கிறார்.

மனமே உனக்கிதமாய் ஒரு வார்த்தை சொல்கிறேன் கேட்டுக்கோ என்று ஒரு கீர்த்தனை அழகாக பாடுவார். தண்டபாணி தேசிகர்

மனம் என்பது கடந்த கால எண்ணங்களின் தொகுப்பு .அவ்வளவுதான்.
நாம் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ விரும்புவதில்லை. கடந்த கால எண்ணங்களிலேயே இருக்கின்றோம். நிகழ் காலத்தில் கூட கடந்த கால  சம்பவங்களை இணைத்து பார்த்துக்கொண்டு நிகழ்காலத்தை கோட்டை விடுகிறோம்.

அதனால்தான் பகவான் ரமணரும், ஓஷோவும் மனதை அழிக்கச் சொன்னார்கள். அதற்கு பல வழிகளை சொல்லிவைத்தார்கள்.

நாயை குளிப்பாட்டி வைத்தாலும் அது நடு  ரோட்டில்தான் போய்  நிற்கும் என்பதுபோல் நம் மனமும் எவளவு உபதேசங்களைக் கேட்டாலும் மீண்டும் மீண்டும் அதன் போக்கிலேதான் போய்க்கொண்டிருக்கிறது

நம்மை இழிவான செயல்களைச் செய்ய தூண்டும் அந்த அடங்காத மனத்தைத்தான் உண்மையில் நாம் "போடா நாயே" என்று விரட்டவேண்டுமே ஒழிய சக மனிதர்களை இழிவுபடுத்த அந்த சொல்லை பயன்படுத்துவதை விட்டுவிட வேண்டும். .



நாய்போல் அலையும் நம் மனதை
நாயை தன்  வாகனமாக  வைத்திருக்கும் பைரவரிடமோ

நான்கு வேதங்கள் நாய் வடிவத்தில் இருக்கும்



தத்தாத்ரேயரிடமோ ஒப்படைத்துவிட்டால் நலம் பெறலாம்.  

4 comments:

  1. நியாயமான வார்த்தை!..
    ஆனால் அப்படி ஒப்படைக்க எத்தனை பேருக்கு "மனம்" வரும் !?..

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்துகொண்டே இருப்போம் முழுமை அடையும் வரை

      Delete
  2. நியாயம்தான். தாவும் மனதை குரங்குடனும் ஒப்பிடுவார்கள் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. அதனால் என்னவோ குரங்கைப் போல் நிலையில்லாமல் தாவிக்கொண்டிருக்கும் மனதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர குரங்கு வடிவம் கொண்ட அனுமனை
      மனிதர்கள் வணங்கும்படி நேரிட்டது போலும்.

      Delete