வளங்களை அள்ளித்தரும்
வரக்ஷ்மியே வந்திடுவாய் !
அலைகடலில் வந்துதித்த
ஆதி லக்ஷ்மியே வருவாய்
அடுத்தடுத்து வாழ்வில்
அலை அலையாய்
இன்பங்கள் பொங்கி வரவே !
இல்லத்தில் தானிய மணிகள்
நிரம்பி வழிந்து அனைவருக்கும்
வயிறார உணவு கிடைக்க
வழி வகை செய்யும் தானிய
லக்ஷ்மியே வந்து நிலையாய்
தங்கிடுவாய்
அச்ச உணர்வகற்றி ,ஆனந்தமாய்
வாழ்ந்திடவே மனதில்
பயமற்ற நிலையை அளிக்கும்
தைர்ய லக்ஷ்மியே என்றும் என்
உள்ளத்தில் நிரந்தரமாய் இடம் கொள்வாய் !
ஆனந்தமாய் வாழவும்
அறம் வளர்த்திடவும் அனைத்து
அயிச்வர்யங்களையும் தந்திடும்
கஜ லக்ஷ்மியே வந்திடுவாய்
மாயக்கண்ணனின் வடிவாம்
மழலை செல்வங்களைத் தந்து
வாழ்வை முழுமை அடையச்
செய்யும் சந்தான லக்ஷ்மியே
அனைவர்க்கும் உன் அருள் கிடைக்கட்டும்
எடுக்கும் செயலில் எல்லாம்
வெற்றியை குவித்திடவே
விஜய லக்ஷ்மியே வந்திடுவாய்
என்றும் என்னோடு நிலைத்திடுவாய்
கலக்கமுறா வாழ்வருளும்
கல்வி செல்வத்தை தந்து தன்னை உணரும் ஞானம்
பெற வழி காட்டும் வித்யா லக்ஷ்மியே
வருக! வருக! வருக!
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை
என்னும் பழியைப் போக்க என்னோடு
எப்போதும் நீ நிலைத்து நிற்பாய்
நல்லதோர் அறங்களைச் செய்து
நன்மைகள் பெறவே
வரக்ஷ்மியே வந்திடுவாய் !
பால் பாயிண்ட் ஆர்ட் -தி .ரா.பட்டாபிராமன்
அலைகடலில் வந்துதித்த
ஆதி லக்ஷ்மியே வருவாய்
அடுத்தடுத்து வாழ்வில்
அலை அலையாய்
இன்பங்கள் பொங்கி வரவே !
இல்லத்தில் தானிய மணிகள்
நிரம்பி வழிந்து அனைவருக்கும்
வயிறார உணவு கிடைக்க
வழி வகை செய்யும் தானிய
லக்ஷ்மியே வந்து நிலையாய்
தங்கிடுவாய்
அச்ச உணர்வகற்றி ,ஆனந்தமாய்
வாழ்ந்திடவே மனதில்
பயமற்ற நிலையை அளிக்கும்
தைர்ய லக்ஷ்மியே என்றும் என்
உள்ளத்தில் நிரந்தரமாய் இடம் கொள்வாய் !
ஓவியம்-தி.ரா . பட்டாபிராமன்
தாமரைப்பூவில் அமர்ந்தவளே
தாமரைக் கண்ணனின் இதயத்தில் உறைபவளே
தடைகளை எல்லாம் தகர்ப்பவளே
தாழ்வில்லா வாழ்வை அளிப்பவளே
தஞ்சம் அடைந்தேன் உன் பொற்பாதம்
தயை புரிவாய் உளம் கனிந்து
அறம் வளர்த்திடவும் அனைத்து
அயிச்வர்யங்களையும் தந்திடும்
கஜ லக்ஷ்மியே வந்திடுவாய்
மெட்டல் பாயில் ஆர்ட் -தி ரா.பட்டாபிராமன்
மழலை செல்வங்களைத் தந்து
வாழ்வை முழுமை அடையச்
செய்யும் சந்தான லக்ஷ்மியே
அனைவர்க்கும் உன் அருள் கிடைக்கட்டும்
எடுக்கும் செயலில் எல்லாம்
வெற்றியை குவித்திடவே
விஜய லக்ஷ்மியே வந்திடுவாய்
என்றும் என்னோடு நிலைத்திடுவாய்
கலக்கமுறா வாழ்வருளும்
கல்வி செல்வத்தை தந்து தன்னை உணரும் ஞானம்
பெற வழி காட்டும் வித்யா லக்ஷ்மியே
வருக! வருக! வருக!
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை
என்னும் பழியைப் போக்க என்னோடு
எப்போதும் நீ நிலைத்து நிற்பாய்
நல்லதோர் அறங்களைச் செய்து
நன்மைகள் பெறவே
தங்கள் ஓவியமும், கைத்திறனும் பாநலமும் மனம் நிறைந்தது..
ReplyDeleteஅழகான அருமையான வரலஷ்மி விரத கொண்டாட்டம்..
கோலாகலப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..வாழ்த்துகள்.!
நன்றி அம்மணி
Deleteஅலைமகளின் அருள் தங்களுக்கு அளவின்றி
கிடைக்கட்டும் .வாழ்வில் ஆனந்தம் பொங்கட்டும்