காண்போரை மயக்கும் கண்ணன்
ஒளிப் பிழம்பாய் இருக்கும் இறைவனை
நம்முடைய ஊனக் கண்களினால்
காண இயலாது
தன் பக்தர்களின் மேல் அளவுகடந்த
அன்பு கொண்ட பரந்தாமன் வர்ணிக்க இயலாத
வடிவழகனாக திருக்கோயில்களில்
காட்சி தந்து நம்மையெல்லாம்
மகிழ்விக்கின்றான்.
நம் மனதின் தாபம் போக்கி
அறியாமையினால் செய்த பாபம் போக்கி
இறையடியார்களின் பெருமை உணராது
அவமதித்ததின் விளைவாக அடைந்த சாபம் போக்கி
வேதனை நீக்கி நன்மைகளை அளிக்கும்
பரந்தாமனின் வித்தியாசமான் வடிவம்
கர்நாடக மாநிலத்தில் உள்ளது.
ஒரு கையில் அபய ஹஸ்தமும், மறு கையில் வரத ஹஸ்தமும்
கொண்டு பொதுவாக காட்சி தரும் பரமன் இங்கு சங்கும் சக்கரமும் கையில் ஏந்தி காட்சி தருகின்றான்.
அவன் மீது கொண்ட அபரிமிதமான பக்தியினால் அவனோடு கலந்துவிட்ட ஆண்டாளின் வடிவம் அற்புதம். கல்லிலே வடிக்கப்பட்ட உயிரோவியம்
கண்டு இன்புறவேண்டும்.
மேற்படி படங்களுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
https://plus.google.com/u/0/101778389614258257071/posts/BzWP1FdpuNg?cfem=1&pid=5843266241727684674&oid=101778389614258257071
கர்நாடகக் கண்ணன் அறிந்தேன் நன்றி ஐயா
ReplyDelete