Wednesday, May 3, 2017

இசையும் நானும் (178)TAMIL Film - - துலாபாரம் -(1968)-பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

இசையும் நானும் (178)TAMIL Film - - துலாபாரம் -(1968)-பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

இசையும் நானும் (178)TAMIL Film - 

தமிழ் திரைப்படம்-  துலாபாரம்  (1968)



மவுத்தார்கன்  இசை-காணொளி (178)

பாடல்- 

துலாபாரம்


பாடியவர்- பி.சுசீலா 




பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே{பூஞ்சிட்டு)


செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்கு
பொன்வண்ண கிண்ணத்தில் பால் கஞ்சி (செல்வர்கள்)

கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி


கண்ணுறங்கு கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு 
{பூஞ்சிட்டு)

மாணிக்க தேர் போல மையிட்டு  பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும் (மாணிக்க)

கண்ணாடி வளையலும் காகித பூக்களும்
கண்ணே உன்மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்(கண்ணுறங்கு)

பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே


2 comments:

  1. அருமை நண்பரே பாடலை முழுமையாக கேட்டேன் தொடருங்கள்...

    ReplyDelete