தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (3)
தட்டிக் கேட்க யாரும் இல்லாத உலகம் (3)
இந்த உலகத்தில் என்ன நடக்கிறது?
இந்த உலகத்தில் என்ன நடக்கிறது?
இந்த உலகத்தை பல சக்திகள்
ஆட்டிப் படைக்கின்றன
கண்ணுக்கு தெரிந்தவை சில
ஆனால் கண்ணுக்கு தெரியாதவை
ஆயிரமாயிரம்.
ஆனால் எல்லாவற்றிற்கும் காரணம்
இயற்கை என்றும் கடவுள் என்றும்
மனிதர்கள் குற்றம் சாட்டிவிட்டு
தப்பித்துக்கொள்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் தான் செய்கின்ற தவறுகளை
ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை
அவன் செய்யும் ஒரு சிறு தவற்றை கூட
அவன் ஏற்றுக் கொண்டு
தன்னை திருத்திக் கொள்ள
முன்வருவதில்லை.
மாறாக தன்னை சுற்றியுள்ளவர்கள் மீதுதான்
அந்த தவற்றை
சுமத்தி ஆனந்தம் காண்பதில்
சுகம் காண்கிறான்.
அதுவும் தற்காலத்தில்
ஒருவன் செய்யும் தவற்றிற்கு
பலர் ஒன்று கூடி பொது சொத்துக்களுக்கு
சேதம் விளைவிப்பதையும்
பல்லாயிரம் மக்களுக்கு துன்பங்களையும்
இழப்புகளையும்
ஏற்படுத்துவதையும்
குறிக்கோளாகவே கொண்டிருக்கிறார்கள்.
இந்த செயல்கள் அன்றாடம் நடைபெறுகின்ற
நிகழ்ச்சிகளாகும் இதற்க்கு விளக்கம் தேவையில்லை
அனைவருக்கும் நன்றாக தெரியும்.
ஒவ்வொரு தவறும் ஒரு தனி மனிதனின்
உள்ளத்தில்தான் முளை விடுகிறது.
அவன் மனதில் முளைத்த எண்ணம்
அது தவறோ அல்லது
நல்லதோ காற்றில்மணம் பரவுவதை போல
இந்த உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறது.
அந்த செயலை ஊடகங்கள் ஒரே நொடியில்
உலகம் முழுவதும் பரவச் செய்து விடுகின்றன.
தற்காலத்திய ஊடகங்கள் பணம் மட்டும் புகழ்
ஈட்டுவதே குறியாக கொண்டு பார்வையாளர்களின்
மனதில் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை மீண்டும் மீண்டும்
வெளியிட்டு மக்களின் மனங்களை மாசு படுத்துகின்றன.
உணர்ச்சிகளை கட்டுப் படுத்த இயலாத மக்கள் உடனே
அதை செயல் படுத்த தொடங்கி விடுகின்றனர்.
மக்களின் மனம் மாசடைந்து விட்டபின் அவர்கள் வசிக்கின்ற
சுற்றுப்புற உலகையும் மாசுபடுத்திவிடுகின்றனர்.
அவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் மன அமைதியின்றி
தவிக்கின்றனர்.
பிறகு எல்லாம் கெட்டு விட்டதாக
மேலுக்கு புலம்பி திரிகின்றனர்.
எந்த விஷயத்திலும்
ஒவ்வொரு தனி மனிதனும் திருந்த வேண்டும்
இல்லாவிடில் அவர்களுக்கும்
அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும்
அவர்கள் வசிக்கின்ற உலகிற்கும்
எந்தவிதமான நன்மையையும்
எக்காலத்திலும்
ஏற்பட வாய்ப்பில்லை.
இதை மனிதர்கள் என்று உணருகிறார்களோ அன்றுதான்
இந்த உலகம் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சொர்க்க பூமியாக
மாறும்.
அதுவரை துன்பங்கள்
தொடர்கதையாகத்தான் இருந்து கொண்டிருக்கும்.
அருமை நண்பரே..
ReplyDeleteதனிமனித ஒழுக்கம் நலிந்து விட்டது உண்மையே..
நண்பரே முந்தைய பதிவுக்கு செல்லவும்.
Delete