ஆ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,(என்னை}
நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா....(என்னை}
பெ: என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதய்யா
சருகான மலர் மீண்டும் மலராதய்யா,(என்றும்)
,
கனவான கதை மீண்டும் தொடராதய்யா,(கனவான)
காற்றான அவள் வாழ்வு திரும்பாதய்யா
பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்,
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்…
ஆ: எந்தன் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா,(எந்தன்)
கனவென்னும் தேரேறி பறந்தாளம்மா(கனவென்னும்)
காற்றோடு காற்றாக கலந்தாளம்மா…(என்னை}
பெ: இன்று உனக்காக உயிர்
வாழும் துணையில்லையா
அவள் ஒளி வீசும் எழில்
கொண்ட சிலையில்லையா,
அவள் வாழ்வும் நீ தந்த வரமல்லவா(அவள்)
அன்போடு அவளோடு மகிழ்வாளய்யா… ஆ…
இருவரும்: என்னை யாரென்று எண்ணி
எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல்
என்று நீ கேட்க்கிறாய்,...
பெ: என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்......
ஆகா...!
ReplyDeleteநன்றி DD
DeleteThis comment has been removed by the author.
Deleteபழைய நினைவுகளை மீட்டி விட்டது நண்பரே
ReplyDeleteநன்றி.நினைவுகளை மீட்டுவதுதான் உண்மையான இசை.இதயத்தை திறந்து வைப்பவர்களுக்கு மட்டும்.
Delete